Home கலை உலகம் முத்தக்காட்சிகளில் நடிக்க அலையவில்லை- சிவகார்த்திகேயன்

முத்தக்காட்சிகளில் நடிக்க அலையவில்லை- சிவகார்த்திகேயன்

763
0
SHARE
Ad

shivaசென்னை, ஏப்ரல் 9- கேடி பில்லா கில்லாடி ரங்கா படத்தில் சிவகார்த்திகேயனின் நடிப்புக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

இதனால் அவர் அடுத்தடுத்து நடித்து வரும் படங்களில் அவர் நடிக்கும் காட்சிகளில் கூடுதலான நகைச்சுவையை புகுத்தி வருகின்றனர்.

இதுபற்றி சிவகார்த்திகேயன் கூறுகையில், நகைச்சுவை  என்பது எனக்கு கைவந்த கலை. பள்ளி காலத்தில் இருந்தே நகைச்சுவையாக பேசிக்கொண்டேயிருப்பேன்.

#TamilSchoolmychoice

அதனால் என்னைச்சுற்றி எப்போதும் ஒரு ரசிகர் கூட்டம் இருக்கும். அதனால்தான் சின்னத்திரைக்குள் நுழைந்து இப்போது சினிமாவிற்குள்ளும் வந்து விட்டேன்.

எனது நகைச்சுவை அறிவை தெரிந்து கொண்ட இயக்குனர்கள் நான் பேசும் வசனங்களில் அதிகப்படியான  நகைச்சுவையை திணிக்கிறார்கள். அதனால்தான் என்னால் ரசிகர்களை சிரிக்க வைக்க முடிகிறது.

மேலும், சினிமாவில் என்னை கவர்ந்த காமெடியன்கள் என்று சொன்னால், கவுண்டமணி, செந்தில், போன்றவர்கள்தான். அதனால் நான் நடிக்கும் படங்களில் அவர்களை பின்பற்றி வருகிறேன் என்று சொல்லும் சிவகார்த்திகேயன், முத்தக்காட்சிகளை வலுக்கட்டாயமாக திணிக்குமாறு டைரக்டர்களை நான் வற்புறுத்தி வருவதாக ஒரு செய்தி உலவுகிறது. ஆனால் அதில் துளியும் உண்மையில்லை என்பவர், நடிகைகளை முத்தம் கொடுக்க அலைகிற ஆள் நான் இல்லை என்றும் சொல்கிறார்.