கோலாலம்பூர்: கொவிட்-19 நோய்தொற்று குறித்து சின அதிபர் ஜின்பெங் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட்டுடன் தொலைபேசி உரையாடலை நடத்தியதாக சிசிடிவி தெரிவித்துள்ளது.
இந்த தொற்றுநோய் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவை பாதிக்கக்கூடும் என்று அந்த அறிக்கை கூறிய உள்ள நிலையில், சீனாவுக்கும் மலேசியாவிற்கும் இடையிலான நெருக்கமான உறவு இன்னும் அப்படியே உள்ளது என்று குறிப்பிட்டுள்ளது.
“மலேசியா போன்ற அண்டை நாடுகள் உட்பட அனைத்துலக சமூகத்தின் ஆதரவையும் புரிதலையும் சீனா மதிக்கிறது” என்று ஜின்பெங் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
அந்த அறிக்கையில் டாக்டர் மகாதீர், இந்த தொற்று நோயைக் கட்டுப்படுத்த சீன அரசு மேற்கொள்ளும் நடவடிக்கையைப் பாராட்டி உள்ளதாகவும் தெரிவித்துள்ளது. மேலும், இது தொடர்பாக உதவிகள் வழங்க பிரதமர் தயாராக உள்ளார் என்றும் சிசிடிவி எழுதியுள்ளது.