Home One Line P1 புரோட்டோன் எக்ஸ்70: உள்ளூர் பதிப்பு வெளியீடு, 5,000 ரிங்கிட் வரையிலும் விலை குறைப்பு!

புரோட்டோன் எக்ஸ்70: உள்ளூர் பதிப்பு வெளியீடு, 5,000 ரிங்கிட் வரையிலும் விலை குறைப்பு!

786
0
SHARE
Ad

கோலாலம்பூர்: புரோட்டோன் எக்ஸ் 70, உள்ளூர் பதிப்பு (சிகேடி) ) இறுதியாக மலேசிய சந்தையில் நான்கு வகைகளாக வெளியிடப்பட்டுள்ளது.

ஸ்டாண்டர்ட், எக்ஸிகியூட்டிவ், பிரீமியம் மற்றும் பிரீமியம் எக்ஸ் என நான்கு வகைகளுடன் இக்கார் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இருப்பினும், சிகேடி பதிப்பில் நாற்சக்கர செலுத்தம் (ஆல்-வீல் டிரைவ்) மாதிரியைக் கொண்டிருக்கவில்லை. பயனர்களிடமிருந்து போதுமான வரவேற்பு இல்லாததால் புரோட்டோன் இந்த மாதிரியை வெளியிடவில்லை என்று கூறியுள்ளது.

#TamilSchoolmychoice

எனவே அனைத்து புரோட்டோன் எக்ஸ் 70 சிகேடி வகைகளும் 1.8 லிட்டர் டிஜிடி இயந்திரத்தைப் பயன்படுத்தும் இரு சக்கர செலுத்தத்தைக் கொண்டிருக்கிறது.

இது புதிய ஏழு வேக தானியங்கி பற்சக்கரப் பெட்டியுடன் (கியர்பாக்ஸ்) (டிசிடி) வருகிறது.

கூடுதலாக, புரோட்டோன் எக்ஸ் 70 சிகேடி மாதிரியில் புதிய வண்ணம் ஒன்றும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. வெள்ளை, வெள்ளி, சாம்பல், சிவப்பு மற்றும் பழுப்பு உள்ளிட்ட பிற வண்ணங்களையும் இக்கார் கொண்டுள்ளது.

புரோட்டோன் எக்ஸ் 70 சிகேடி மாதிரியின் விலை சிபியு மாதிரிகளைக் காட்டிலும் 1,000 ரிங்கிட்டிலிருந்து 5,000 ரிங்கிட் வரையிலும் குறைவாக உள்ளது.