Home One Line P2 கொவிட் -19-க்கான முதல் தடுப்பூசி 18 மாதங்களுக்குள் தயாரிக்கப்படும்!- உலக சுகாதார நிறுவனம்

கொவிட் -19-க்கான முதல் தடுப்பூசி 18 மாதங்களுக்குள் தயாரிக்கப்படும்!- உலக சுகாதார நிறுவனம்

673
0
SHARE
Ad

ஜெனீவா: கொவிட் -19-க்கான முதல் தடுப்பூசி 18 மாதங்களுக்குள் தயாரிக்கப்படும் என்று உலக சுகாதார நிறுவனத்தின் இயக்குநர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் கடந்த செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.

“இந்நோய் பரவுவதைத் தடுக்க நாம் நிறைய செய்ய முடியும், மேலும் பரவாமல் கட்டுப்படுத்த தயாராக இருக்க வேண்டும்” என்று அவர் தனது டுவிட்டர் பதிவில் கூறியுள்ளார்.

“கொவிட் -19 நோய் தொற்றை தடுப்பதற்கு எங்களுக்கு இப்போது முதலீடு தேவை” என்று அவர் முன்னதாக ஒரு செய்தியாளர் கூட்டத்தில் அவர் கூறினார் .

#TamilSchoolmychoice

மேலும் தடுப்பூசிகள் மற்றும் சிகிச்சை முறைகளை தயாரிப்பது ஆராய்ச்சியில் ஒரு முக்கியமான அங்கமாகும் என்று அவர் கூறினார்.

“பொது சுகாதாரத்தில் இப்போது பல கொள்கைகள் மற்றும் முன்னெச்சரிக்கைகள் இருப்பதால், நம்மை தற்காத்துக் கொள்ளலாம் ” என்று அவர் கூறினார்.

“எனவே, நீண்டகால நடவடிக்கைகளுக்குத் தயாராகும் அதே வேளையில், வைரஸை எதிர்த்துப் போராடுவதற்கு நம்முடைய தற்போதைய திறன்களைப் பயன்படுத்த நாம் தொடர்ந்து முயற்சிக்க வேண்டும்,” என்று அவர் மேலும் கூறினார்.