Home One Line P1 “பாஸ் நாட்டைக் காப்பாற்றுவது எல்லாம் கட்டுக்கதை!”- லிம் கிட் சியாங்

“பாஸ் நாட்டைக் காப்பாற்றுவது எல்லாம் கட்டுக்கதை!”- லிம் கிட் சியாங்

665
0
SHARE
Ad

கோலாலம்பூர்: டாக்டர் மகாதீர் முகமட் மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு “நாட்டைக் காப்பாற்றுவதை” நோக்கமாகக் கொண்டது என்று பாஸ் கட்சித் தலைவர் அப்துல் ஹாடி அவாங் கூறுவது வெறும் கட்டுக்கதை என்று ஜசெக கட்சி மூத்த தலைவர் லிம் கிட் சியாங் தெரிவித்தார்.

“அடுத்த மாதம் நாடாளுமன்றத்தில் பிரதமர் தொடர்பான நம்பிக்கைக் வாக்கெடுப்பு நாட்டைக் காப்பாற்றுவதை நோக்கமாகக் கொண்டவை என்று பாஸ் கட்சியின் சமீபத்திய விசித்திரக் கதையை நம்பும் அளவுக்கு மலேசியர்கள் முட்டாள்கள் அல்ல” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

“இது நம்பிக்கைக் கூட்டணி அரசாங்கத்தைத் தாக்கும் ஒரு வியூகம்.”

#TamilSchoolmychoice

“அரசியல் நோக்கம் கொண்ட கட்சிகள் பல இன, மத மற்றும் கலாச்சார தேசத்தின் எதிர்காலத்தை ஆபத்தில் வைக்கின்றன” என்று அவர் இன்று சனிக்கிழமை ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.

கடந்த காலத்தில் ஸ்பெயினில் இஸ்லாமிய ஆதிக்கம் வீழ்ச்சியடைந்ததற்கான உதாரணங்களை மேற்கோள் காட்டி, அரசியல் அமைப்பை முஸ்லிம்கள் புரிந்துகொள்வது முக்கியம் என்று ஹாடி கூறியிருந்தார்.

அமைச்சரவையில் தங்களின் வாக்களிப்பதற்கான தீர்மானத்தை கொண்டு வரப்படுவது ஜனநாயக வழிமுறைக்கு ஏற்ப இருப்பதாக ஹாடி நேற்று கூறினார்.

“முக்கியமான விஷயம் என்னவென்றால், நாங்கள் நாட்டை காப்பாற்ற விரும்புகிறோம். மலாய் முஸ்லிம்கள் மட்டுமல்ல, இதர இனங்கள் உட்பட.”

“அரசாங்கத்தின் நீண்ட வரலாற்றைக் கொண்ட பிரதமர் துன் மகாதீருக்கு நம்பிக்கை வாக்கெடுப்பை வழங்குவது எங்களுக்கு சிறப்பானதாகக் கருதுகிறோம் .”

“(மகாதீர்) பதவிக்காலம் முடியும் வரை பிரதமராக இருப்பார் என்று நாங்கள் நம்புகிறோம். இது பாஸ் கட்சியின் திட்டம், “என்று அவர் கூறினார்.

பாஸின் நடவடிக்கை நாடாளுமன்ற ஜனநாயகத்தின் கொள்கைகளில் கட்சிக்கு எந்த அர்ப்பணிப்பும் இல்லை என்பதை மட்டுமே காட்டுகிறது என்று கிட் சியாங் தெரிவித்தார்.

இந்த ஆண்டு நவம்பருக்குப் பிறகு தாம் பிதரமர் பதவியிலிருந்து விலகுவதாக பிரதமர் நேற்று மீண்டும் வலியுறுத்தினார்.