Home One Line P1 சுல்தான் இப்ராகிமுடன் புகைப்படம் எடுத்துள்ளீர்களா? கவர்ச்சிகரப் பரிசுகளை வெல்லும் வாய்ப்பு!

சுல்தான் இப்ராகிமுடன் புகைப்படம் எடுத்துள்ளீர்களா? கவர்ச்சிகரப் பரிசுகளை வெல்லும் வாய்ப்பு!

539
0
SHARE
Ad

ஜோகூர் பாரு : சுல்தான் இப்ராகிமுடன் புகைப்படம் எடுத்துள்ளவர்களுக்கு கவர்ச்சிகரமான பரிசுகளை வெல்லும் வாய்ப்பு ஏற்படுள்ளது.

சுல்தான் இப்ராகிமுடன் எடுக்கப்பட்ட அந்த விலைமதிப்பற புகைப்படத்தை “ஜோகூர் சுல்தானுடன் புகைப்பட போட்டி” எனும் போட்டிக்கு அனுப்புவதன் மூலம் மக்கள் பலவிதமான பரிசுகளை வெல்லும் வாய்ப்பைப் பெற்றுள்ளனர்.

இந்த விவகாரம் குறித்து ஜோகூர் சுல்தானின் அதிகாரப்பூர்வ முகநூல் பக்கத்தில் அறிவிக்கப்பட்டிருந்தது. அவருடன் எடுத்துக்கொண்ட சிறந்த படத்தை அனுப்பி பரிசுகளை வெல்லுமாறு மலேசியர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

#TamilSchoolmychoice

முதல் பத்து போட்டியாளர்களுக்கு சுல்தான் இப்ராகிம் தனிப்பட்ட முறையில் கையெழுத்திட அவர்களின் படம் உட்பட கவர்ச்சிகரமான பரிசுகள் கிடைக்கும்.

பங்கேற்பாளர்கள் பேஸ்புக் மெசஞ்சர் மூலமாக மட்டுமே அப்புகைப்படங்களை அனுப்ப முடியும். பின்னூட்ட பகுதிகள் அல்லது பிற ஊடகங்கள் வழியாக அனுப்பப்படும் படங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.

கூடுதலாக, பங்கேற்பாளர்கள் சுல்தான் ஜோகூரின் முகநூல் பக்கத்தில் உள்ள ‘விருப்பு’ பொத்தானைக் அழுத்தியும், அல்லது அவரின் இன்ஸ்டாகிராம் கணக்கை (@officialsultanibrahim) பின்தொடர வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

போட்டியின் அறிவிப்பில் உள்ள ‘விருப்பு’ பொத்தானைக் சுட்டி, ஹேஷ்டேட் #sultanjohorkita என்று இடுகையிட்டு, மூன்று நண்பர்களுடன் அதனை தங்கள் முகநூல் கணக்குகளில் பகிர்ந்து கொள்ள வேண்டும்.

பிப்ரவரி 21 வரை மலேசிய மக்கள் தங்கள் புகைப்படங்களை அனுப்பி வைக்கலாம்.