Home One Line P1 1.25 பில்லியன் ரிங்கிட் ஒப்பந்த மதிப்பு கல்வி அமைச்சுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படாமலே ஜெபாக் நிறுவனம் நிர்ணயித்தது!

1.25 பில்லியன் ரிங்கிட் ஒப்பந்த மதிப்பு கல்வி அமைச்சுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படாமலே ஜெபாக் நிறுவனம் நிர்ணயித்தது!

545
0
SHARE
Ad

கோலாலம்பூர்: சரவாக் கிராமப்புற பள்ளிகளுக்கான சூரிய சக்தி திட்டத்திற்கான 1.25 பில்லியன் ரிங்கிட் ஒப்பந்த மதிப்பை ஜெபாக் ஹோல்டிங்ஸ் செண்டெரியான் பெர்ஹாட், கல்வி அமைச்சகத்துடன் பேச்சுவார்த்தை நடத்தாமலேயே நிர்ணயித்ததாக உயர் நீதிமன்றத்திடம் நேற்று திங்கட்கிழமை தெரிவிக்கப்பட்டது.

ஏற்றுக்கொள்ளும் கடிதம் (எஸ்எஸ்டி) வழங்கப்படுவதற்கு முன்னர், சிறந்த மதிப்பைப் பெறுவதற்கு கல்வி அமைச்சகத்திற்கும், ஜெபாக் நிறுவனத்திற்கும் இடையில் விலை பேச்சுவார்த்தைகள் எதுவும் நடத்தப்படவில்லை என்று நிதி அமைச்சகத்தின் துணை பொதுச் செயலாளர் ஒத்மான் செமாயில், 58, தெரிவித்தார்.

“1.25 பில்லியன் ரிங்கிட் சூரிய சக்தி திட்டத்தின் ஒப்பந்த மதிப்பு ஆரம்பத்தில் இருந்தே ஜெபாக்கால் அமைக்கப்பட்டது மற்றும் கல்வி அமைச்சினால் முழுமையாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.”

#TamilSchoolmychoice

“என்னைப் பொறுத்தமட்டில், 50 மில்லியன் ரிங்கிட்டுக்கும் அதிகமான திட்டங்களுக்கு செய்யப்படும் மதிப்பீடு எதுவும் செய்யப்படவில்லை” என்று டத்தின்ஸ்ரீ ரோஸ்மா மன்சோரின் ஊழல் வழக்கு தொடர்பான விசாரணையின் போது துணை அரசு வழக்கறிஞர் டி. தீபா நாயர் நடத்திய முக்கிய பரிசோதனையின் போது அவர் கூறினார்.

அப்போது நிதி அமைச்சகத்தில் அரசு கொள்முதல் பிரிவின் செயலாளராக இருந்த ஒத்மான், சூரிய சக்தி திட்டத்தின் தேவை, திட்டத்தின் நோக்கம் மற்றும் கல்வி அமைச்சின் நிதி திறன் மற்றும் திட்டத்தை செயல்படுத்த ஜெபாக்கின் திறன் குறித்து தெளிவான விளக்கம் எதுவும் இல்லை என்றும் கூறினார்.

அப்போது நிதியமைச்சராக இருந்த முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் ரசாக்கின் வழிகாட்டுதல் மற்றும் ஒப்புதல்படிதான் சூரிய சக்தி திட்டம் ஜெபாக்குக்கு வழங்கப்பட்டது என்று அவர் குறிப்பிட்டார்.