Home One Line P2 பருவநிலை மாற்ற விளைவுகளை எதிர்கொள்ள ஜெப் பெசோஸ் 10 மில்லியன் டாலர் நிதியளிப்பு!

பருவநிலை மாற்ற விளைவுகளை எதிர்கொள்ள ஜெப் பெசோஸ் 10 மில்லியன் டாலர் நிதியளிப்பு!

714
0
SHARE
Ad

கலிபோர்னியா: சுற்றுச்சூழலைப் பாதுகாக்கவும், பருவநிலை மாற்றத்தின் விளைவுகளை எதிர்கொள்ள போராடும் விஞ்ஞானிகள், ஆர்வலர்கள், இலாப நோக்கற்ற அமைப்புகள் மற்றும் பிற குழுக்களுக்கும் அமேசான் தலைமை நிர்வாக அதிகாரி ஜெப் பெசோஸ் 10 பில்லியன் அமெரிக்க டாலர்களை (41.44 பில்லியன் ரிங்கிட்) நிதியளிக்க உள்ளதாக நேற்று திங்களன்று அறிவித்துள்ளார்.

உமிழ்வைக் குறைப்பது அமேசானுக்கு சவாலாக இருக்கும் பட்சத்தில், அதுவும் மின் வணிகத் துறையில் இந்நிறுவனம் ஆண்டுக்கு 10 பில்லியன் பொருட்களை வழங்குகிறது. ஒரு பெரிய போக்குவரத்து சூழல் மற்றும் தரவு மைய தடத்தைக் கொண்டிருப்பதால் தனது சொந்த பணியாளர்களிடமிருந்தே அமேசான் விமர்சனங்களை எதிர்கொண்டது.

புவி வெப்பமடைதலின் தாக்கத்தை எதிர்த்துப் போராடுவதற்கு கணிசமான நிதியை அர்ப்பணிப்பதற்கான பணக்காரர்களின் பட்டியலில், உலகின் மிகப் பெரிய பணக்காரர் பெசோஸ்ஸும் உள்ளார்.

#TamilSchoolmychoice

“பருவநிலை மாற்றம் நம் உலகிற்கு மிகப்பெரிய அச்சுறுத்தல்” என்று பெசோஸ் இன்ஸ்டாகிராம் பதிவில் கூறினார்.

“அறியப்பட்ட வழிகளைப் பெருக்கவும், நாம் அனைவரும் பகிர்ந்து கொள்ளும் இந்த உலகில் பருவநிலை மாற்றத்தின் பேரழிவு தரும் தாக்கத்தை எதிர்த்துப் போராடுவதற்கான புதிய வழிகளை ஆராயவும் மற்றவர்களுடன் இணைந்து பணியாற்ற விரும்புகிறேன்.”

இந்த முயற்சியின் ஒரு பகுதியாக இந்த கோடையில் பெசோஸ் எர்த் பண்ட் மானியங்களை வழங்கத் தொடங்க உள்ளது.

“இது பெரிய நிறுவனங்கள், சிறு நிறுவனங்கள், தேசிய அரசுகள், உலகளாவிய நிறுவனங்கள் மற்றும் தனிநபர்களிடமிருந்து கூட்டு நடவடிக்கை எடுக்கப் போகிறது” என்று பெசோஸ் கூறினார்.

அமேசான் சுற்றுச்சூழல் ஆர்வலர்களின் எதிர்ப்புகளையும், பருவநிலை மாற்றம் குறித்து நடவடிக்கை எடுக்க அதன் ஊழியர்களின் அழுத்தத்தையும் எதிர்கொண்டது.

கடந்த ஆண்டு பிற்பகுதியில் சான் பிரான்சிஸ்கோ மற்றும் சியாட்டிலில் நடந்த பருவநிலை மாற்ற அணிவகுப்புகளில் பெரிய தொழில்நுட்ப நிறுவனங்களின் நூற்றுக்கணக்கான ஊழியர்களில் அமேசான் தொழிலாளர்கள் இருந்தனர்.

தங்கள் முதலாளிகள் புவி வெப்பமடைதலைக் கையாள்வதில் மிகவும் தாமதமாக செயல்படுவதாகவும், மேலும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம் என்றும் கூறினர்.