Home One Line P1 ஏபெக் மாநாட்டில் கொவிட்-19 பாதிப்பு குறித்து விவாதிக்கப்படும்!

ஏபெக் மாநாட்டில் கொவிட்-19 பாதிப்பு குறித்து விவாதிக்கப்படும்!

808
0
SHARE
Ad
படம்: ஏபெக் தகவல் தொடர்பு மற்றும் விவகார இயக்குநர் மைக்கேல் சாப்னிக்

புத்ராஜெயா: கொவிட்-19 பாதிப்பு குறித்து, குறிப்பாக நோயின் விளைவுகள் மற்றும் அபாயங்கள் நவம்பரில் நடக்க இருக்கும் ஆசிய பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு (ஏபெக்) மாநாட்டிலும் விவாதிக்கப்படும் என்று ஏபெக் தகவல் தொடர்பு மற்றும் விவகார இயக்குநர் மைக்கேல் சாப்னிக் தெரிவித்தார்.

இப்போது 20-க்கும் மேற்பட்ட நாடுகளை பாதித்துள்ள கொவிட்-19 ஆபத்து குறித்த ஏபெக் அறிந்திருப்பதாக அவர் கூறினார்.

“வருகிற வாரங்களில் ஒரு கூட்டத்தில் நாங்கள் அதைப் பற்றி விவாதிப்போம். அனைத்து 21 ஏபெக் உறுப்பு நாடுகளுடனும் நாங்கள் நெருக்கமாக பணியாற்றுவோம்” என்று அவர் இன்று புதன்கிழமை 2020- ஆம் ஆண்டிற்கான ஏபெக் முன்னுரிமைப் பகுதி குறித்த ஏபெக் குழுத் தலைவர் செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

உறுப்பு நாடுகளில் கொவிட்-19 தொற்று நோயின் தாக்கத்தை குறைப்பதில் ஏபெக்கின் நடவடிக்கைகள் குறித்து சாப்னிக்கிடம் வினவப்பட்டது.

மலேசியா தவிர, சீனா, ஜப்பான், ஹாங்காங், சிங்கப்பூர், தாய்லாந்து, கனடா மற்றும் வியட்நாம் ஆகியவை ஏராளமான நாடுகளில் கொவிட் -19 நோய்த்தொற்றுகளைப் பதிவு செய்துள்ளன.

இந்நோய் 72,000-க்கும் அதிகமான மக்களைப் பாதித்து, சீனாவில் 2,000-க்கும் மேற்பட்ட உயிர்களைக் கொன்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

22 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் மலேசியா இம்முறை இந்த மாநாட்டை ஏற்று நடத்த உள்ளது. மொத்தம் 21 நாடுகளின் தலைவர்களும், 21 உறுப்பு நாடுகளைச் சேர்ந்த 16,000 பிரதிநிதிகளும் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.