Home One Line P2 அஸ்ட்ரோவில் அனைத்துலக தாய் மொழி தின சிறப்பு நிகழச்சிகள்!

அஸ்ட்ரோவில் அனைத்துலக தாய் மொழி தின சிறப்பு நிகழச்சிகள்!

1274
0
SHARE
Ad

அனைத்துலக தாய் மொழி தினத்தை முன்னிட்டு அஸ்ட்ரோவில் சிறப்பம்சங்களாக பல்வேறு நிகழ்ச்சிகள் ஒளிபரப்பப்பட உள்ளன. மேலும், அஸ்ட்ரோவின் இந்நிகழ்ச்சிகளை அஸ்ட்ரோ கோ வாயிலாக எங்கும் ஸ்ட்ரீம் செய்து பார்த்து மகிழ முடியும்.

அன்றைய தினம் ஒளிபரப்பாக உள்ள நிகழ்ச்சிகளின் கூடுதல் விவரங்கள் கீழே இணைக்கப்பட்டுள்ளன.

ஆதி தமிழர் அண்டம்
மக்கள் தொலைக்காட்சி (அலைவரிசை 203), காலை 9.30

#TamilSchoolmychoice

பண்டைய காலங்களில் தமிழ் மொழி எவ்வாறு பரவியது மற்றும் உலகளவில் பேசப்பட்டது என்பது குறித்த ஆவணப்படம்.

தந்தை சொல்மிக்க மந்திரமில்லை
மக்கள் தொலைக்காட்சி (அலைவரிசை 203), காலை 10.00

அனைத்துலக தாய் மொழி தின கொண்டாட்டத்தின் பின்னணியில் உள்ள காரணங்கள், தமிழ் மொழியின் தனித்துவம் மற்றும் பலவற்றில், இந்தியாவின் தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர், பத்மஸ்ரீ டாக்டர் அவ்வை நடராஜன் மற்றும் அவரது மகன் டாக்டர் அவ்வை  அருள் ஆகியோர் கலந்து சிறப்பிக்கும் பேச்சு நிகழ்ச்சி.

தமிழோடு வாழ்வோம்
மக்கள் தொலைக்காட்சி (அலைவரிசை 203), இரவு 7.30

இந்தியாவின் உலக தமிழ் ஆராய்ச்சி மையத்திலிருந்து பேராசிரியர் கே. விஜயராகவன் சிறப்பு விருந்தினராக கலந்து சிறப்பிக்கும் இப்பேச்சு நிகழ்வானது தமிழ் மக்களின் வரலாறு குறித்த பல தசாப்த கால ஆராய்ச்சியின் அடிப்படையில் நிரந்தர கண்காட்சியுடன் ஒரு கலாச்சார மையத்தை அமைத்தல் போன்ற உள்ளடக்கங்களை கொண்டுள்ளது.

தமிழே முழங்கு
மக்கள் தொலைக்காட்சி (அலைவரிசை 203), இரவு 8.00

திரைப்பட இசை இயக்குனர் டாக்டர் காந்திதாசன் கலந்து சிறப்பிக்கும் இப்பேச்சு நிகழ்ச்சிவில், அவர் தனது இசையமைப்பு அனுபவத்தைப் பகிர்ந்து கொள்வார். இந்நிகழ்ச்சியில் கம்போடிய அரசாங்கத்தால் விருது பெற்ற அவர் இயற்றிய 2019 அனைத்துலக தாய்மொழி தினத்தையொட்டிய பாடலும் இடம்பெறும்.

விழுதுகள் நேரலை
வானவில் (அலைவரிசை 201) மற்றும் விண்மீன் எச்டி (அலைவரிசை 231), காலை 9.30

விழுதுகள் தொகுப்பாளர்களான ஸ்ரீ குமரன் மற்றும் குணசிலன் ஆகியோர் மொழி வல்லுநரும் விரிவுரையாளருமான மன்னார் மன்னன் மருதாயை நேர்காணல் செய்வார்கள். மன்னார் நமது தாய்மொழியைக் கற்றுக்கொள்வதன் முக்கியத்துவத்தைப் பற்றின ஒரு சில விவரங்களை இந்நேர்காணல் மூலம் பகிர்ந்துக் கொள்வார்.

மாணவர்களுக்கு பன்மொழி கட்டுரைகள் மற்றும் கதைகளை வழங்கும் “அருந்தகை” எனும் செயலியின் படைப்பாளர்களும் மற்றொரு சிறப்பு நேர்காணலில் இடம்பெறுவர்.

டாக்டர் தனேஷ் பாலகிருஷ்ணன் (கல்வி தொழில்நுட்ப அதிகாரி, ஆசிரியர் செயல்பாட்டு மையம், சித்தியாவன்), பரிமலா வடிவேலு (மஞ்ஜூங் மாவட்ட கல்வி இலாகா உதவி அதிகாரி), புஸ்பராதா பெருமாள் (கொலம்பியா கம்பத் தமிழ்ப்பள்ளி தலைமையாசிரியர்), மற்றும் கலை செல்வன் மோகன் (கொலம்பியா கம்பத் தமிழ்ப்பள்ளி மூத்த ஆசிரியர்), ஆகியோர் இச்செயலி உருவாக்கியதன் நோக்கத்தைப் பகிர்ந்துக்கொள்வர்.