Home One Line P2 நிர்பயா கொலை வழக்கு: தூக்குத் தண்டனையிலிருந்து தப்பிக்க வினய் ஷர்மா தாமாகவே சுவரில் மோதி காயம்!

நிர்பயா கொலை வழக்கு: தூக்குத் தண்டனையிலிருந்து தப்பிக்க வினய் ஷர்மா தாமாகவே சுவரில் மோதி காயம்!

526
0
SHARE
Ad

புது டில்லி: டில்லியில் கடந்த 2012-ஆம் ஆண்டு டிசம்பர் 16-ஆம் தேதியன்று, மருத்துவ மாணவி நிர்பயா ஓடும் பேருந்தில் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட நால்வருக்கு மார்ச் மாதம் 3-ஆம் தேதி காலை 6 மணிக்கு (இந்திய நேரப்படி) தூக்கிலிடுவதற்கு டில்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

முறைப்படி குற்றவாளிகள் நான்கு பேரும் கடந்த ஜனவரி 22-ஆம் தேதி தூக்கிலிடப்பட்டிருக்க வேண்டும். ஆனால், முகேஷ் சிங் குடியரசு தலைவருக்கு கருணை மனு அனுப்பி அது நிராகரிக்கப்பட்டதால் தாமதம் ஏற்பட்டு, தண்டனை நிறைவேற்றப்படுவது பிப்ரவரி 1-ஆம் தேதிக்கு மாற்றப்பட்டது. பின்பு, அதுவும் நிறுத்தி வைக்கப்பட்டது.

ஆயினும், குற்றவாளிகளுக்கு சட்ட வாய்ப்புகள் இன்னும் உள்ளதாக சட்ட வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர். இதனைப் பயன்படுத்தி அவர்கள், தண்டனையை நிறைவேற்றும் காலத்தை தள்ளிப்போடுவார்கள் என்றும் கூறப்பட்டு வந்த நிலையில், குற்றவாளிகளில் ஒருவரான வினய் ஷர்மா, தூக்கு தண்டனையை தாமதப்படுத்த தனக்குத்தானே சுவரில் மோதிக்கொண்டு காயத்தை ஏற்படுத்தியுள்ளான்.

#TamilSchoolmychoice

தண்டனையை இரத்து செய்யவும், தள்ளிப் போடவும் குற்றவாளிகள் பல வழிகளில் முயற்சி செய்து வருவது இதன் வழியாகத் தெரியவந்துள்ளது.

இந்த சம்பவம் கடந்த பிப்ரவரி 16-ஆம் தேதியன்று நடந்ததாகக் கூறப்படுகிறது. உடனடியாக அவரை மீட்ட சிறை அதிகாரிகள் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று, முதலுதவி அளித்துள்ளனர்.

தூக்கிலிடும் போது சம்பந்தப்பட்ட நபர் நல்ல உடல் ஆரோக்கியத்தோடு இருக்க வேண்டுமென்பது விதி. இதனை, சாக்காகப் பயன்படுத்தி வினய் ஷர்மா தன் தலையை சுவற்றில் மோதி தனக்குத் தானே காயத்தை ஏற்படுத்தி இருப்பதாக திகார் சிறை நிர்வாகம் தெரிவித்துள்ளது.