கோலாலம்பூர்: சமூக ஊடகங்கள் மூலம் நிதியமைச்சர் லிம் குவான் எங்கிற்கு எதிரான குற்றவியல் அச்சுறுத்தல்களை தாம் தீவிரமாக கவனிப்பதாக தகவல் தொடர்பு மற்றும் பல்லூடக அமைச்சர் கோபிந்த் சிங் டியோ இன்று வியாழக்கிழமை தெரிவித்தார்.
“போலி செய்திகளுக்கு மேலதிகமாக, சமூக ஊடகங்கள் மூலம் குற்ற அச்சுறுத்தல் என்பது ஒரு தீவிரமான விடயமாகும், இது எந்தவொரு தரப்பினருக்கும் எதிராக குற்றவியல் அச்சுறுத்தல் செய்ததாக விசாரணையில் காணப்பட்டால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்” என்று அவர் பெர்னாமாவிடம் கூறினார்.
நேற்று புதன்கிழமை முகநூல் மூலம் லிமுக்கு அச்சுறுத்தல் விடுத்ததாக ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டதை அடுத்து அவர் இது குறித்துப் பேசினார்.
சம்பந்தப்பட்டவர்கள், லிம் முஸ்லிம்களின் முதல் எதிரி என்றும், அவரது இரத்தம் ஹலால் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.
“இந்த விவகாரம் தொடர்பாக காவல் துறையில் புகார் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக எனக்குத் தெரியவந்துள்ளது” என்று கோபிந்த் கூறினார்.