Home One Line P1 மூன்றாவது முறையாக தமிழ் மற்றும் சீனப்பள்ளிகளின் இருப்பு குறித்து வழக்கு தாக்கல்!

மூன்றாவது முறையாக தமிழ் மற்றும் சீனப்பள்ளிகளின் இருப்பு குறித்து வழக்கு தாக்கல்!

694
0
SHARE
Ad
படம்: மலேசிய முஸ்லிம் ஆசிரியர் சங்கத்தை பிரதிநிதிக்கும் வழக்கறிஞர் ஷாஹாருடின் அலி

கோத்தா பாரு: அரசியலமைப்பில் தமிழ் மற்றும் சீனப் பள்ளிகளின் இருப்பை சவால் செய்து மலேசிய முஸ்லிம் ஆசிரியர் சங்கம் கோத்தா பாரு உயர் நீதிமன்றத்தில் அரசாங்கத்திற்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்துள்ளது.

சீன மற்றும் தமிழ் பள்ளிகளில் சீனம் மற்றும் தமிழ் மொழியைப் பயன்படுத்துவதற்கு அங்கீகாரம் அளிக்கும் கல்விச் சட்டம் 1996- இன் 17 மற்றும் 28 பிரிவுகள் மத்திய அரசியலமைப்பின்படி இல்லை என்ற அறிவிப்பை இந்தக் குழு கோரியுள்ளது.

நேற்று வியாழக்கிழமை இது தொடர்பாக வழக்கு தாக்கல் செய்யப்பட்டது என்று ஓர் அறிக்கையின் வாயிலாக அக்குழுவை பிரதிநிதித்துவப்படுத்தும் வழக்கறிஞர் ஷாஹருடின் அலி தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

“வழக்கு விசாரணைக்காக நீதிமன்றம் விரைவில் ஒரு தேதியை நிர்ணயிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது” என்று ஷாஹருடின் கூறினார்.

பிரிவு 17 (1) படி, பிரிவு 28-இன் கீழ் நிறுவப்பட்ட தேசிய வகை பள்ளிகள் அல்லது இந்த துணைப்பிரிவிலிருந்து அமைச்சரால் விலக்கு அளிக்கப்பட்ட வேறு எந்த கல்வி நிறுவனங்களையும் தவிர, தேசிய கல்வி முறைமைக்குள் உள்ள அனைத்து கல்வி நிறுவனங்களிலும் தேசிய மொழி முதன்மை மொழியாக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்துகிறது.

பிரிவு 17 (2) படி, ஒரு கல்வி நிறுவனத்தின் முதன்மை மொழி தேசிய மொழியைத் தவிர வேறு மொழியாக இருந்தால், அந்த கல்வி நிறுவனத்தில் தேசிய மொழி கட்டாய பாடமாக கற்பிக்கப்பட வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளது.

பிரிவு 28, தேசிய பள்ளி மற்றும் தேசிய வகைப் பள்ளிகளை நிறுவுதல் மற்றும் பராமரிப்பது குறித்து விவாதிக்கிறது. இந்த சட்டத்தின் விதிகளுக்கு உட்பட்டு, அமைச்சர் ஒரு தேசிய பள்ளி மற்றும் ஒரு தேசிய வகை பள்ளியை நிறுவலாம் மற்றும் அந்த பள்ளிகளை பராமரிக்க வேண்டும் என்று குறிப்பிடுகிறது.

நம்பிக்கைக் கூட்டணி ஆட்சிக்கு வந்ததிலிருந்து மூன்றாவது முறையாக தமிழ் மற்றும் சீனப்பள்ளிகளின் இருப்பு குறித்து சவால் செய்யப்பட்டுள்ளது.