Home One Line P1 கொவிட்-19: ஜோகூர்-சிங்கப்பூர் மனித போக்குவரத்து பாதுகாக்கப்பட வேண்டும், இல்லையேல் நோய் எளிதாக பரவும்!

கொவிட்-19: ஜோகூர்-சிங்கப்பூர் மனித போக்குவரத்து பாதுகாக்கப்பட வேண்டும், இல்லையேல் நோய் எளிதாக பரவும்!

737
0
SHARE
Ad

கோலாலம்பூர்: கொவிட்-19 நோய்த்தொற்று பரவுவதை நிவர்த்தி செய்யும் முயற்சியாக மலேசியாவும் சிங்கப்பூரும் ஜோகூர் நெடுஞ்சாலைகளில் அதிகமான மனித போக்குவரத்து கொண்ட இடங்களில் பாதுகாப்பை தீவிரப்படுத்தும் என்று வெளியுறவு அமைச்சர் டத்தோ சைபுடின் அப்துல்லா தெரிவித்தார்.

தினசரி 250,000 போக்குவரத்துகள் இப்பகுதியில் இருப்பதால் இது குறித்து கவனிக்க வேண்டி உள்ளதாகவும், சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணனுடன் முறைசாரா சந்திப்பை நடத்தியதாகவும் அவர் கூறினார்.

“இரு நாடுகளிலும் உள்ள அதிகாரிகள் அதிகமான போக்குவரத்து இருப்பதால், கொவிட்-19-இன் இயக்கத்தை கையாள்வதில் இணைந்து மேம்படுத்துவார்கள் என்று நம்புகிறேன்.”

#TamilSchoolmychoice

“நாங்கள் அதைச் செய்யாவிட்டால், அந்நோய் எளிதாக மலேசியாவிற்குள் கசிந்து விடும். எனவே, நாம் எல்லையை இணைந்து பாதுகாக்க வேண்டும்,” என்று அவர் ஆசியான் வெளியுறவு அமைச்சர்களின் சிறப்புக் கூட்டத்தில் கலந்து கொண்ட பின்னர் பெர்னாமாவிடம் கூறினார்.

இந்த கூட்டத்திற்கு சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி மற்றும் பிலிப்பைன்ஸ் வெளியுறவு செயலாளர் தியோடோரோ லோக்சின் ஆகியோர் தலைமை தாங்கினர்.

அடுத்த சில மாதங்களுக்கு இந்த பாதிப்பு தொடரும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும், ஆசியான் மற்றும் சீனா உறுப்பினர்கள் அனைவரும் கொவிட்-19 பாதிப்பைத் தொடர்ந்து உறுப்பு நாடுகளின் பொருளாதார தாக்கத்தை குறைக்க ஒரு வியூகத்தை வகுக்க ஒப்புக்கொண்டதாகவும் அவர் கூறினார்.

“வைரஸ் பல மாதங்களுக்கு தொடரும் என்பதை நாங்கள் புரிந்துகொண்டோம். எனவே, (ஆசியான்) நாடுகளின் (சவால்களை), குறிப்பாக சுற்றுலாத் துறையில் எதிர்நோக்க உள்ள இழப்பை கடக்க வேண்டும்,” என்று அவர் கூறினார்.

“சுற்றுலாப் பயணிகளின் வருகையை மட்டுப்படுத்தும் முயற்சியில், நாம் ஒரு பகிரப்பட்ட புரிதலைக் கொண்டிருக்க வேண்டும்.” என்று அவர் கூறினார்.