Home One Line P1 “புதிய அரசாங்கம் அமைப்பது தாமதிக்கப்பட்டால், அது தோல்வியில் முடியும்!”- அஸ்மின்

“புதிய அரசாங்கம் அமைப்பது தாமதிக்கப்பட்டால், அது தோல்வியில் முடியும்!”- அஸ்மின்

799
0
SHARE
Ad

கோலாலம்பூர்: எதிர்க்கட்சியுடன் புதிய கூட்டணியை உருவாக்கும் திட்டங்கள் ஒத்திவைக்கப்பட்டால் தோல்வியடையும் என்று பொருளாதார விவகார அமைச்சர் அஸ்மின் அலி கவலை தெரிவித்துள்ளார்.

நேற்றிரவு ஞாயிற்றுக்கிழமை தனது ஆதரவாளர்களுடனான சந்திப்பின் போது அஸ்மின் இதனைக் கூறினார்.

பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் மற்றும் சுல்தான் அப்துல்லா ஆகியோர் புதிய அரசாங்க முன்மொழிவைப் பற்றி விவாதிக்க நேரம் தேவைப்படுவதாக அவர் கூறினார்.

#TamilSchoolmychoice

அஸ்மினின் முகாம், பெர்சாத்து, அம்னோ, பாஸ், ஜிபிஸ் மற்றும் வாரிசான் கூட்டணியைச் சேர்ந்த தலைவர்களுடன் இணைந்து நாடாளுமன்றத்தில் தங்களுக்கு பெரும்பான்மை ஆதரவு இருப்பதற்கான ஒன்றுகூடல் நிகழ்ச்சியாக நேற்றைய சம்பவம் மாறியது.

நேற்றையக் கூட்டத்தின் முடிவுகள் வெளியிடப்படவில்லை, அதற்காக அதிக நேரம் தேவை என்று அஸ்மின் கூறினார்.

“துன் டாக்டர் மகாதீர் மற்றும் மாமன்னர் ஆகியோருக்கு பேச சிறிது நேரம் தேவைப்படுவதால் அவர்களுக்கு பேச வாய்ப்பு கொடுங்கள்.”

“ஆனால், யாரோ ஒருவர் நாடாளுமன்ற உறுப்பினர்களை வாங்க முயற்சிப்பதால் அதிக நேரம் எடுத்துக் கொள்ள வேண்டாம் என்று நினைக்கிறேன்.” என்று அவர் குறிப்பிட்டார்.

புதிய அரசு அமைக்கும் வதந்திகள் கிளம்பியுள்ளன. அதனால்தான், புதிய கூட்டணியை நிறுவுவதற்கு அதிக நேரம் எடுக்க முடியாது என்று அவர் கூறினார்.

“பல்லாயிரக்கணக்ககான ரிங்கிட்டுக்கு நாடாளுமன்ற உறுப்பினர்களை வாங்க வந்ததாக அதிகாரிகள் சமீபத்தில் தெரிவித்தனர்.”

“எனவே இந்த பிரச்சனையால் நாம் நீண்ட நேரம் காத்திருக்க முடியாது.”

“இன்று (நேற்று) பிற்பகல் மாமன்னரை சந்தித்த கட்சிகளின் தலைவர்கள் இந்த கொள்கையை நிலைநிறுத்துவதாக உறுதியளித்துள்ளனர், மேலும், ஒரு புதிய கூட்டணியைக் காண்போம், அது எங்கள் எதிர்காலத்தை சிறப்பாக உறுதிப்படுத்தும்” என்று அவர் மேலும் கூறினார்.

புதிய கூட்டணி உருவாக்கப்பட்டால், அதில் ஜசெக, அமானா மற்றும் பிகேஆர் ஆகிய கட்சிகளை உள்ளடக்குவது சாத்தியமில்லை .