கோலாலம்பூர்: நேற்று ஞாயிற்றுக்கிழமை நாட்டை உலுக்கிய அரசியல் மறுசீரமைப்பின் வதந்திகள் இன்னும் முடிவுக்கு வராத நிலையில், இன்று பிகேஆர் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் மாமன்னர் சுல்தான் அப்துல்லாவை பிற்பகல் 2.30 மணியளவில் சந்திக்க உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, நேற்று சிகாம்புட்டில் உள்ள தனது இல்லத்தில் குழுமிய ஆதரவாளர்களுக்கு ஆறுதல் கூறிய பிகேஆர் கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிம், புதிய அரசாங்கம் அமைக்க அஸ்மின் அலி, பெர்சாத்து, அம்னோ, பாஸ், காகாசான் சரவாக், வாரிசான் சபா ஆகிய கட்சிகள் இணைந்து மேற்கொண்ட அரசியல் சூழ்ச்சி ஒரு துரோகச் செயல் என வர்ணித்தார்.
நாளையே (இன்று) புதிய அரசாங்கம் அமைக்கப்படலாம் என எதிர்பார்ப்பதாகவும் அன்வார் இப்ராகிம் தெரிவித்துள்ளார்.