Home One Line P1 நம்பிக்கைக் கூட்டணியிலிருந்து பெர்சாத்து வெளியேறியது

நம்பிக்கைக் கூட்டணியிலிருந்து பெர்சாத்து வெளியேறியது

612
0
SHARE
Ad

கோலாலம்பூர் – நான்கு கட்சிகளைக் கொண்ட நம்பிக்கைக் கூட்டணியிலிருந்து பெர்சாத்து கட்சி வெளியேறுவதாக அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

பெர்சாத்து கட்சியின் அனைத்து தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளும் தொடர்ந்து மகாதீர் பிரதமராகத் தொடர ஆதரவு தெரிவிப்பதாகவும் பெர்சாத்து கட்சியின் 26 நாடாளுமன்ற உறுப்பினர்களும் மகாதீருக்கு ஆதரவு தெரிவித்து சத்தியப் பிரமாண ஆவணத்தில் கையெழுத்திட்டிருப்பதாகவும் பெர்சாத்து கட்சியின் தலைவர் டான்ஸ்ரீ மொகிதின் யாசின் அறிக்கை ஒன்றில் தெரிவித்திருக்கிறார்.

பெர்சாத்துவின் 26 நாடாளுமன்ற உறுப்பினர்கள், பிகேஆர் கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்ட இருவரான அஸ்மின் அலி, சுரைடா கமாருடின் ஆகியோரையும் சேர்த்து தற்போது 28 நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவு நம்பிக்கைக் கூட்டணிக்கு இல்லை என்பதால் இயல்பாகவே அந்தக் கூட்டணி நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை இழந்துள்ளது.