Home One Line P1 தேமு, பாஸ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாமன்னரை சந்திக்கின்றனர், போதுமான பெரும்பான்மை இருப்பதாக தகவல்!

தேமு, பாஸ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாமன்னரை சந்திக்கின்றனர், போதுமான பெரும்பான்மை இருப்பதாக தகவல்!

703
0
SHARE
Ad

கோலாலம்பூர்: அனைத்து தேசிய முன்னணி மற்றும் பாஸ் நாடாளுமன்ற உறுப்பினர்களும் இன்று திங்கட்கிழமை மாலை இஸ்தானா நெகாராவில் மாமன்னர் சுல்தான் அப்துல்லாவை சந்திக்க இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோத்தா பாரு நாடாளுமன்ற உறுப்பினரான தக்கியுடின் கூறுகையில், புதிய அரசாங்கத்தை அமைப்பதற்கு தேசிய முன்னணிக்கும் பாஸ் கட்சிக்கும் போதுமான நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருப்பதாகத் தெரிவித்தார்.

“ஆம், எங்களிடம் போதுமான எண்ணிக்கையிலான 129 நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளனர். இன்று மாலை நாங்கள் அரண்மனையில் மாமன்னரை சந்திப்போம், ” என்று இன்று இங்குள்ள அம்னோ தலைமையகத்தில் சந்தித்தபோது அவர் கூறினார்.