Home One Line P1 பெர்சாத்து பிளவுபடுமா? சிலர் அன்வார் பக்கம் சாயலாம்!

பெர்சாத்து பிளவுபடுமா? சிலர் அன்வார் பக்கம் சாயலாம்!

634
0
SHARE
Ad

கோலாலம்பூர் – பெர்சாத்து கட்சியின் தலைவராக துன் மகாதீர் பதவி விலகியதைத் தொடர்ந்து, அந்தக் கட்சியின் தலைவராக மொகிதின் யாசின் தொடர்ந்து கட்சியைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க முடியுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

நம்பிக்கைக் கூட்டணியிலிருந்து விலகுவதாக பெர்சாத்து அறிவித்திருப்பதால் அந்தக் கட்சி நட்டாற்றில் விடப்பட்ட கதையாக அரசியல் சூழ்நிலை மாறியிருக்கிறது.

துன் மகாதீரின் பிரதமர் பதவி விலகல் மாமன்னரால் ஏற்றுக் கொள்ளப்பட்டிருப்பதால், அவர் மீண்டும் பிரதமராக முடியாது என்ற சூழல் ஏற்பட்டிருக்கிறது. அவரையே மீண்டும் இடைக்காலப் பிரதமராக மாமன்னர் நியமித்திருந்தாலும், பெர்சாத்து கட்சித் தலைமைப் பொறுப்பிலிருந்தும் மகாதீர் விலகியிருக்கிறார்.

#TamilSchoolmychoice

இதனால், பெர்சாத்து கட்சி மீண்டும் நம்பிக்கைக் கூட்டணியில் இணையுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

பெர்சாத்து கட்சியின் இளைஞர் பகுதித் தலைவர் சைட் சாதிக் மற்றும் முன்னாள் அமைச்சர் மஸ்லீ மாலிக் போன்ற சில தலைவர்கள் மகாதீரைத் தொடர்ந்து அந்தக் கட்சியிலிருந்து வெளியேறுவர் என வெளிவந்திருக்கும் ஆரூடங்களை பெர்சாத்து கட்சியின் தலைமைச் செயலாளர் மர்சுக்கி யாஹ்யா மறுத்துள்ளார்.