Home One Line P1 மாமன்னரை சந்திக்க அஸ்மின் அலி தரப்பு காத்திருப்பு!

மாமன்னரை சந்திக்க அஸ்மின் அலி தரப்பு காத்திருப்பு!

584
0
SHARE
Ad

கோலாலம்பூர்: முன்னாள் பிகேஆர் துணைத் தலைவர் அஸ்மின் அலியும் அவரது ஆதரவாளர்களும் மாமன்னர் சுல்தான் அப்துல்லாவை சந்திப்பதற்கான சமிக்ஞைக்காக காத்திருப்பதாகத் தெரிவித்துள்ளனர்.

காலையிலிருந்து பல்வேறு தலைவர்கள் இடைக்கால பிரதமர் துன் மகாதீரையும், மாமன்னர் சுல்தான் அப்துல்லாவை சந்தித்து வரும் நிலையில், தங்களுக்கு சமிக்ஞை வந்ததும் அவ்வாறு செய்யப்படும் என்று போர்னியோ நாடாளுமன்ற உறுப்பினர் வில்லி மோங்கின் தெரிவித்தார்.

தற்போது, தாங்கள் சோபிடெல் தங்கும் விடுதியில் காத்திருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice

“நாங்கள் அறிவுறுத்தல்களுக்காக காத்திருக்கிறோம்,” என்று அவர் சோபிடெல் தங்கும் விடுதியில் செய்தியாளர்களிடம் கூறினார்.