கோலாலம்பூர்: பெர்சாத்து கட்சியின் உயர்மட்டக் குழு உறுப்பினர் காடிர் ஜாசின், அன்வார் மற்றும் ஜசெக குறிப்பிட்ட அதே காரணத்தை தனது வலைப்பதிவு இடுகையில் எழுதியுள்ளார்.
நவம்பர் மாதம் நடைபெற இருக்கும் ஆசிய-பசிபிக் பொருளாதார மாநாட்டின் (ஏபெக்) உச்ச மாநாட்டிற்குப் பிறகு அன்வார் இப்ராகிமிடம் அதிகாரத்தை ஒப்படைப்பதாக “அவரின் கொள்கைகளை கைவிட்டு வாக்குறுதியை மீறுமாறு கட்டாயப்படுத்த வேண்டாம்” என்று கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற சந்திப்புக் கூட்டத்தில் மகாதீர் கட்சியை வலியுறுத்தினார் என்றும் காடிர் கூறினார்.
உச்சமட்டக் குழு அவரை விட தனது அரசியல் செயலாளரிடமிருந்து அதிகம் அறிவுறைகளை கேட்கிறது என்றதாலும், மகாதீர் பெர்சாத்து கட்சியின் தலைவர் பதவியை விட்டு விலகியதாக காடிர் தெரிவித்தார்.
ஞாயிற்றுக்கிழமை நடந்த அரசியல் கட்சிகளின் நியாயமற்ற முயற்சிகளில் மகாதீர் ஈடுபடவில்லை என்று அன்வார் மற்றும் ஜசெக முன்னதாகத் தெரிவித்தனர்.