Home One Line P2 ரஜினியின் அடுத்தப் படம் ‘அண்ணாத்த’!

ரஜினியின் அடுத்தப் படம் ‘அண்ணாத்த’!

1072
0
SHARE
Ad

சென்னை: நடிகர் ரஜினிகாந்தின் “தலைவர் 168” திரைப்படம் இப்போது அதிகாரப்பூர்வ தலைப்பைக் கொண்டுள்ளது. சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இத்திரைப்படத்தினை இயக்குனர் சிவா இயக்குகிறார். இப்படத்திற்கு ‘அண்ணாத்த’ என்று தலைப்பிடப்பட்டுள்ளது.

இத்திரைப்படம் குறித்து இன்னும் அதிகம் தெரியவில்லை என்றாலும், கிராமப்புற பின்னணியில் படம் அமைக்கப்படும் என்று ஊகிக்கப்படுகிறது. நடிகர் அஜித் உடனான வெற்றிகரமான திரைப்படத்தை வழங்கிய சிவா, இதற்கு முன்னர் 2019-ஆம் ஆண்டின் வெற்றித்திரைப்படமான விஸ்வாசத்தை இயக்கியிருந்தார்.

நயன்தாரா, குஷ்பு, கீர்த்தி சுரேஷ், மீனா, பிரகாஷ் ராஜ் மற்றும் சூரி ஆகியோரும் இப்படத்தில் நடித்துள்ளனர்.

#TamilSchoolmychoice

ஏறக்குறைய 10 வருட இடைவெளிக்குப் பிறகு குஷ்பு தமிழ் திரையுலகிற்கு திரும்புகிறார். 28 வருட இடைவெளிக்கு பிறகு மீண்டும் ரஜினியுடன் இணைந்து பணியாற்றவுள்ளார். நயன்தாராவும் ரஜினிகாந்தும் இணைந்து படத்தில் நடிப்பது இது மூன்றாவது முறையாகும். கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பில் இத்திரைப்படத்தின் குறுமுன்னோட்டத்தைக் காணலாம்: