Home One Line P1 மகாதீரின் ‘ஒற்றுமை அரசாங்கத்தை’ ஆதரிக்கிறேன்!- அம்பிகா

மகாதீரின் ‘ஒற்றுமை அரசாங்கத்தை’ ஆதரிக்கிறேன்!- அம்பிகா

777
0
SHARE
Ad
அம்பிகா சீனிவாசன் – கோப்புப் படம்

கோலாலம்பூர்: நாடு எதிர்கொள்ளும் அரசியல் மோதலைத் தீர்க்க ஒற்றுமை அரசாங்கத்தை நிறுவுவதற்கான முன்மொழிவுக்கு முன்னாள் பெர்சே தலைவர் அம்பிகா சீனிவாசன் ஆதரிப்பதாகக் கூறியுள்ளார்.

“நிலைத்தன்மை தேவைப்படும்போது நான் அமைச்சரவை அல்லது அரசாங்க ஒற்றுமையை ஆதரிக்கிறேன். நமக்கு அது தேவை.”

“மக்கள் நலனுக்காக அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். டாக்டர் மகாதீரிடமிருந்து இது குறித்து நாம் கூடுதலாக கேட்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன். உள்ளடக்கம் என்ன? ஒருவேளை நாம் முன்பு கேள்விப்பட்டதைப் போல இது ஒரு ஒற்றுமை அரசாங்கமாக இருக்காது.”

#TamilSchoolmychoice

“இது கட்சி அமைப்பை அடிப்படையாகக் கொண்டிருக்காத அமைச்சரவையை உருவாக்குவது பற்றியாக இருந்தால், அதற்கு நம் ஆதரவு தேவைப்படும்” என்று அவர் டுவிட்டரில் தெரிவித்தார்.