Home One Line P1 “பெரும்பான்மையில் மூன்றாவது இடத்தில் உள்ள மகாதீர் பிரதமராகும் ஆசையை கைவிட வேண்டும்!”- பிஎஸ்எம்

“பெரும்பான்மையில் மூன்றாவது இடத்தில் உள்ள மகாதீர் பிரதமராகும் ஆசையை கைவிட வேண்டும்!”- பிஎஸ்எம்

703
0
SHARE
Ad

கோலாலம்பூர்: பிரதமர் பதவி வேட்பாளரை அதன் 14-வது பொதுத் தேர்தல் அறிக்கையை மையப்படுத்தி “தெளிவாகவும் உறுதியாகவும்” முடிவு எடுத்துள்ள நம்பிக்கைக் கூட்டணியின் நடவடிக்கையை பிஎஸ்எம் துணைத் தலைவர் எஸ்.அருட்செல்வன் வரவேற்கிறார்.

நம்பிக்கைக் கூட்டணி தனது சொந்த அறிக்கைக்கு முன்னுரிமை அளிக்கத் தவறிவிட்டது அல்லது அதை செயல்படுத்துவதில் “மிகவும் பலவீனமாக” இருந்தது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

“நம்பிக்கைக் கூட்டணி அடிக்கடி அதிகாரத்தை மாற்றுவதில் போராடியது, மேலும் இனம் தொடர்பான பிரச்சனைகளில் உடன்படவில்லை” என்று அவர் ஓர் அறிக்கையில் கூறினார்.

#TamilSchoolmychoice

டாக்டர் மகாதீர் முகமட் நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவை இழந்துவிட்டதால், நம்பிக்கைக் கூட்டணி ஆதரவின் எண்ணிக்கையின் அடிப்படையில் மூன்றாவது இடத்தில் அவர் இப்போது இருக்கிறார். எனவே, அவர் போட்டியிலிருந்து விலக வேண்டும் என்று அவர் மேலும் கூறினார்.

“(அவர்) நாட்டின் அரசியலின் எதிர்காலத்தை மற்ற கட்சிகளுக்கு விட்டு கொடுக்க வேண்டும்.” என்று அவர் கூறினார்.