கோலாலம்பூர்: இடைக்கால பிரதமரின் செல்லுபடியை முன்னாள் அரசாங்கத் தலைமை வழக்கறிஞர் முகமட் அபாண்டி அலி கேள்விக்குள்ளாக்கி உள்ளார்.
முன்னதாக அம்னோ ஒழுக்காற்று வாரியத்தின் தலைவராக பணியாற்றிய அவர், நாட்டின் அரசியலமைப்பு அப்பதவிக்கு வழங்கவில்லை என்று கூறினார்.
“இடைக்கால பிரதமர் அரசியலமைப்பில் இல்லை.”
“நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் பிரதமராக தேர்ந்தெடுப்பதற்கான நம்பிக்கையைப் பெற நாடாளுமன்ற உறுப்பினர்கள் பெரும்பான்மையாக ஆதரவு அளிக்காவிட்டால், தற்போதைய சூழ்நிலையில், மாமன்னர் மக்களவையை கலைக்கக்கூடும். ” என்று அவர் கூறினார்.