Home One Line P1 அஸ்மின் அலி உட்பட 11 நாடாளுமன்ற உறுப்பினர்கள் பெர்சாத்துவில் இணைவர்!- வட்டாரம்

அஸ்மின் அலி உட்பட 11 நாடாளுமன்ற உறுப்பினர்கள் பெர்சாத்துவில் இணைவர்!- வட்டாரம்

568
0
SHARE
Ad

கோலாலம்பூர்: முன்னாள் பிகேஆர் துணைத் தலைவர் டத்தோஸ்ரீ அஸ்மின் அலி தலைமையில் கட்சியை விட்டு வெளியேறிய 11 நாடாளுமன்ற உறுப்பினர்கள் பெர்சாத்துவில் விரைவில் இணைவார்கள் என்று ஒரு வட்டாரம் தெரிவித்ததாக டி ஸ்டார் குறிப்பிட்டுள்ளது.

26 நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட பெர்சாத்து முகாமை விரிவுபடுத்துவதாக அந்த வட்டாரம் தெரிவித்துள்ளது.

“தற்போது, பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட் கட்சியின் முகாமில் 26 பேர் மட்டுமே உள்ளனர். அவர்கள் சேரும்போது, அது 37 ஆக இருக்கும். 41 பேரைக் கொண்ட தேசிய முன்னணி விட நான்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் மட்டுமே குறைவு.”

#TamilSchoolmychoice

“அஸ்மினின் முகாமில் உள்ள 11 பேரும் பூமிபுத்ரா தான். ஏற்றுக்கொள்ளப்படுவதில் எந்தப் பிரச்சனையும் இருக்காது. பூமிபூத்ரா அல்லாத ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் பெர்சாத்துவுடன் இணை உறுப்பினராக இணைவார்.” என்று அவ்வட்டாரம் தெரிவித்துள்ளது.