கோலாலம்பூரில்: கடந்த திங்கட்கிழமை பெர்சாத்து கட்சியிலிருந்து விலகியதாக தெரிவித்த இடைக்கால பிரதமர் மீண்டும் பெர்சாத்து கட்சியின் தலைவர் பதவியை ஏற்பதாக இன்று வியாழக்கிழமை புத்ராஜெயவில் நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் தெரிவித்தார்.
ஒரு வேளை மொகிதின் யாசின் பிரதமர் வேட்பாளராக முன்மொழியப்பட்டால், அதுபடி நடப்பதற்காக பெரும்பான்மையை அவர் பெற்றால், மொகிதின் அடுத்த பிரதமராகலாம் என்று அவர் தெரிவித்தார்.
“எல்லோரும் அவரைத் தேர்ந்தெடுத்தால், எனக்கும் சம்மதம்” என்று மகாதீர் கூறினார். பெரும்பான்மையான நாடாளுமன்ற உறுப்பினர்கள் மொகிதினைத் தேர்ந்தெடுத்தால் தாம் ஏற்றுக்கொள்வதாக அவர் கூறினார்.
அவர் உட்பட இரண்டு வேட்பாளர்களை பெர்சாத்து பெயரிடுமா என்று கேட்டதற்கு, கட்சி இன்னும் ஒரு முடிவுக்கு வரவில்லை என்று மகாதீர் கூறினார்.
அம்னோவுடன் பணியாற்றுவதில் தனக்கும் மொகிதினுக்கும் மாறுபட்ட கருத்துக்கள் இருப்பதாக மகாதீர் கூறினார்.
“எனது நிலைப்பாடு, நிச்சயமாக, நான் அம்னோவை ஒரு கூட்டணி கட்சியாக ஏற்றுக்கொள்ள மாட்டேன்.”
“ஆனால் மொகிதின் இன்னும் கொஞ்சம் நிதானமாக இருக்கிறார், அவற்றை ஏற்றுக்கொள்ள தயாராக இருக்கிறார்,” என்று அவர் கூறுகிறார்.