Home One Line P2 கொவிட்-19: பாதிப்பு அதிகரித்துக் கொண்டிருக்கையில் தொற்றுநோய்க்கான அறிவிப்பை உலக சுகாதார நிறுவனம் அறிவிக்கும்!

கொவிட்-19: பாதிப்பு அதிகரித்துக் கொண்டிருக்கையில் தொற்றுநோய்க்கான அறிவிப்பை உலக சுகாதார நிறுவனம் அறிவிக்கும்!

464
0
SHARE
Ad

ஜெனீவா: முதன்முறையாக, கொவிட்-19 தொடர்பான வழக்குகள் சீனாவைத் தவிர்த்து வெளிநாடுகளில் அதிகமான எண்ணிக்கையை பதிவு செய்துள்ளதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

செவ்வாயன்று சீனாவில் புதிய வழக்குகளின் எண்ணிக்கை 411- ஆகவும், மற்ற நாடுகளில் 427 வழக்குகள் இருப்பதாகவும் உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

நேற்று புதன்கிழமை காலை நிலவரப்படி, சீனாவில் 78,190 வழக்குகள் பதிவாகியுள்ள நிலையில் , மேலும் இந்த எண்ணிக்கையில் 2,718 மரணங்கள் நிகழ்ந்துள்ளதாக உலக சுகாதார நிறுவன இயக்குநர் டாக்டர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

சீனாவுக்கு வெளியே அதிகரித்து வரும் இந்நோய் தொடர்பான வழக்குகளின் அடிப்படையில், இது ஒரு தொற்றுநோய் என அறிவிக்க உலக சுகாதார நிறுவனம் ஒப்புக் கொண்டது என்று அவர் கூறினார்.

“நாங்கள் இது ஒரு தொற்றுநோயை என உடனே அறிவிக்க விரும்பவில்லை,” என்று அவர் கூறினார்.

இந்த அறிவிப்பு உலக சுகாதார நிறுவனம் இனி இந்த வைரஸைக் கட்டுப்படுத்த முடியாது என்பதற்கான சமிக்ஞையை வழங்கும் என்று அவர் கூறினார்.

எவ்வாறாயினும், தற்போதைய நிலைமையை பிரதிபலிக்க வேண்டுமானால் அதை ஒரு தொற்றுநோயாக அறிவிக்க உலக சுகாதார நிறுவனம் தயங்காது என்று அவர் வலியுறுத்தினார்.