கோலாலம்பூர்: பொது சேவை என்பது அரசாங்க நிர்வாகத்தின் தூணாகும் என்றும், இதற்கு தொழில்முறை நடவடிக்கை தேவைப்படுகிறது என்றும் பிரதமர் அலுவலகம் இன்று வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.
அனைத்து அரசு ஊழியர்களும் எல்லா சவால்கள் குறித்தும் விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும் முன்னேற்றத்தைக் காண எப்போதும் தளத்தில் இருக்க வேண்டும் என்று அது குறிப்பிட்டுள்ளது.
தங்களுக்கு வழங்கப்பட்ட நம்பிக்கையின் பேரில், சிறந்த நிர்வாகத்தை மக்களுக்கு வழங்கவும், பொறுப்புள்ள நம்பிக்கையை நிறைவேற்ற அரசு ஊழியர்கள் மீது அதிக எதிர்பார்ப்பு உள்ளது என்றும் அது தெரிவித்துள்ளது.
நாட்டின் நிர்வாகத்தை வலுப்படுத்துவதற்கான, புதிய நிர்வாகத்தில் எந்தவொரு மாற்றத்தையும் கையாளும் சரியான புரிதல், தகவல் தொடர்பு மற்றும் வழிமுறைகளுடன் அரசு ஊழியர்கள் எப்போதும் தயாராக இருக்கிறார்கள் என்று அது தெரிவித்தது.
எந்தவொரு தரப்பினரையும் சார்ந்திராமல் சிறந்த சேவையை வழங்குவதற்காக அரசு ஊழியர்கள் பொது சேவையின் நேர்மை மற்றும் தொழில் திறனை பராமரிக்க அரசியலில் இருந்து விலகி இருக்க வேண்டும் என்று அது தெளிவுப்படுத்தியது.