Home One Line P1 கொவிட்-19: நிலைமை மோசமடையாமல் இருக்க, பாதுகாப்புத் திட்டங்களை டிரம்ப் அறிவித்தார்!

கொவிட்-19: நிலைமை மோசமடையாமல் இருக்க, பாதுகாப்புத் திட்டங்களை டிரம்ப் அறிவித்தார்!

647
0
SHARE
Ad

கொவிட்-19 அச்சுறுத்தலால் அமெரிக்கா குறைவாக பாதிக்கப்பட்டிருந்தாலும், இப்போது அது மேலும் நிலைமை மோசமடையாமல் இருப்பதற்கு திட்டங்களை அறிவித்துள்ளது.

உலகளாவிய கொவிட்-19 தொற்று நோய் குறித்து எதுவும் கருத்துரைக்காத அதிபர் டொனால்டு டிரம்ப் திடீரென வெள்ளை மாளிகையில் கடந்த புதன்கிழமை ஓர் அறிக்கை வெளியிட்டார்.

கோவிட் -19 நோயால் பாதிக்கப்படுவதைத் தவிர்ப்பது – வழக்கமாக கைகளை கழுவுதல், போன்றதை வழக்கமாக்கிக் கொள்ளுமாறு அவர் தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice

சீன நகரமான வுஹானில் இருந்து திரும்பிய மூன்று நோயாளிகளும், டைமண்ட் பிரின்சஸ் கப்பலில் இருந்த 42 பயணிகளைத் தவிர, இன்றுவரை, அமெரிக்காவில் 15 கொவிட்-19 வழக்குகள் பதிவுசெய்யப்பட்டுள்ளன.

கொவிட்-19 நோய் அமெரிக்கர்களுக்கு ஒரு பிரச்சனையாக மாறும் என்று எச்சரித்த பொது சுகாதார நிபுணர்களுடன முன்னதாக டிரம்ப் உடன்படவில்லை.

ஆனால், கொவிட்-19 தொடர்ந்து பரவினால் அமெரிக்கா நாட்டை தயார் நிலையில் வைக்க வேண்டும் என்பதை டிரம்ப் ஒப்புக்கொண்டார்.

“அமெரிக்க சமூகத்தின் ஒவ்வொரு அம்சமும் தயாராக இருக்க வேண்டும்,” என்று அவர் கூறினார்.