Home One Line P2 ராகாவின் பன்னாட்டு மகளிர் தினக் கொண்டாட்டத்திற்கு அனைத்து மலேசியர்களும் அழைக்கப்படுகின்றனர்

ராகாவின் பன்னாட்டு மகளிர் தினக் கொண்டாட்டத்திற்கு அனைத்து மலேசியர்களும் அழைக்கப்படுகின்றனர்

625
0
SHARE
Ad

கோலாலம்பூர் – அனைத்து மலேசியர்களும் பன்னாட்டு மகளிர் தினத்தை (IWD) முன்னிட்டு ராகா மற்றும் DrYDrS Ftness பயிற்சி மையம் இணைந்து ஏற்பாடு செய்துள்ள Zumba-வில் கலந்து பயன் பெறுவதோடு 2 முதல் 6 மார்ச் வரை, காலை மணி  6 முதல் 10 வரை ராகாவில் கலக்கல் காலை அங்கத்தில் இடம்பெறும் ஊக்கமூட்டும் நேர்காணல்களையும் கேட்டுப் பயனடையலாம். Zumba நிகழ்வானது மார்ச் 8 ஆம் தேதி அன்று காலை மணி 10 முதல் மதியம் மணி 12 வரை நடைபெறும்.

கேளிக்கை நிறைந்த Zumba-வில் பங்கேற்பதோடு, ராகாவில் ஒளிபரப்பாகும் ஊக்கமிகு நேர்காணல்களையும் நேயர்கள் கேட்டு மகிழலாம்.

SW Banquet Hall, Kompleks TLK, Brickfields-வில் இல் நடைபெறும் இந்நிகழ்ச்சியில் ராகா சாதனை ஹீரோ புகழ் டாக்டர் ஷாலினி ராமச்சந்திரன் பங்கேற்பாளர்களுக்கு பயிற்சி வழங்குவார். இரண்டு ஆண்டுகளாக சிறந்த முறையில் Zumba பயிற்றுவிக்கும் இவர் ஒரு மருத்துவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிகழ்ச்சியில் பங்கேற்பாளர்கள் இலவசமாகப் பங்கு பெற்று பயனடையலாம்.

#TamilSchoolmychoice

மேலும், இரசிகர்கள் காலை மணி 6 முதல் 10 வரையிலான கலக்கல் காலை அங்கத்தில் வாரம் முழுவதும்  இடம் பெறவிருக்கும் ஊக்கமளிக்கும் நேர்காணல்களையும் கேட்டுப் பயன்பெறலாம்:

  • திங்கள், 2 மார்ச்: கலக்கல் காலை அங்கத்தின் அறிவிப்பாளர்கள் தங்கள் சாதனைக்கு ஊன்று கோலாகத் திகழ்ந்த பெண்களிடம் உரையாடுவர். அதே வேளை இரசிகர்கள் பெண்களுக்கு தாங்கள் கூற விரும்பும் கருத்துக்களையும் அழைத்துப் பகிர்ந்துக் கொள்ளலாம்.
  • செவ்வாய், 3 மார்ச்: சமூக ஊடகங்களில் ராகா ரசிகர்கள் எழுப்பும் சில கேள்விகள் அல்லது சந்தேகங்களை டாக்டர் பிரவீனா பெண்களுக்கானப் பிரத்தியேக இலவச கிளினிக்கின் வழி தெளிவுபடுத்துவார். இந்த இலவசக் கிளினிக்கை இரசிகர்கள் இன்ஸ்டாகிராம் லைவ் வழியாக பதிவிறக்கம் (ஸ்ட்ரீம்) செய்யலாம்.
  • புதன், 4 மார்ச்: RYTHM அறக்கட்டளையின் நிறுவனர்களில் ஒருவரான ஜெயமலர் சாமுவேல், புறநகரில் உள்ள பெண்களின் வாழ்க்கை குறித்துப் பேசுவார். பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான வன்முறை, பாலியல் இனப்பெருக்க ஆரோக்கியம் மற்றும் உரிமைகள் தொடர்பான வழக்குகளில் விரிவான பணி அனுபவம் கொண்டவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.
  • வியாழன், 5 மார்ச்: கலக்கல் காலை அறிவிப்பாளர், அஹிலா ‘Pad Woman’ என்று அழைக்கப்படும் புவனேஸ்வரியுடன் ஒன்றினைந்து கோலாலம்பூரைச் சுற்றியுள்ள வீடற்ற பெண்களுக்கு sanitary pad-களை உள்ளடக்கிய சுகாதாரப் பொதிகளை வழங்குவார்.
  • வெள்ளி, 6 மார்ச்: மலேசியப் பெண் கலைஞர்களை உள்ளடக்கிய ஓர் இசையங்கம் இடம்பெறும்.

ராகாவின் உள்ளடக்க மேலாளர் சுப்பிரமணியம் வீராசாமி கூறுகையில் “பன்னாட்டு மகளிர் தினத்தை முன்னிட்டு அனைத்து மகளிர்களையும் கொண்டாடுவதில் ராகா மகிழ்ச்சியடைகிறது. மலேசியாவின் முதல் தர தமிழ் வானொலியான ராகா, இது போன்ற முயற்சிகளின் வழி பெண்களை ஊக்குவிக்கப்படுவதோடு அங்கீகரிக்கவும் செய்கிறார்கள் என்பதை நாங்கள் பெரிதும் நம்புகிறோம். மேலும், உள்ளூர் சமூகத்தினரைத் தொடர்ந்து ஊக்குவிப்பதோடு நேர்மறை தாக்கத்தை ஏற்படுத்துவதையும் நாங்கள் உறுதி செய்கிறோம்” என்று தெரிவித்தார்.

ராகாவைப் பின்தொடர : raaga.my

இலவச SYOK செயலியை உடனே பதிவிறக்கம் செய்து ராகாவை எங்கும் எப்போதும் கேட்டு மகிழுங்கள்!

                www.facebook.com/RAAGA.my

                www.instagram.com/raaga.my

 

வானொலி வழி ராகாவைக் கேட்டு மகிழ:

இடம்                                   பண்பலை இலக்கம்

கிள்ளான் பள்ளத்தாக்கு             99.3FM

அலோர்ஸ்டார்                          102.4FM

பினாங்கு                                  99.3FM

ஈப்போ                                     97.9FM

சிரம்பான்                                101.5FM

மலாக்கா                                 99.7FM

ஜொகூர் / ஜேபி                        103.7FM

தைப்பிங்                                 102.1FM

லங்காவி                                 101.9FM

ஆஸ்ட்ரோ அலைவரிசை          859