Home One Line P1 மொகிதின் யாசின் அணியினர் மீண்டும் நாளை மாமன்னரை சந்திப்பர்!

மொகிதின் யாசின் அணியினர் மீண்டும் நாளை மாமன்னரை சந்திப்பர்!

560
0
SHARE
Ad

கோலாலம்பூர்: பெர்சாத்து தலைவர் மொகிதின் யாசின் 40 நிமிடங்களுக்குப் பிறகு இஸ்தானா நெகாராவை விட்டு வெளியேறினார்.

அவருடன் வெளியேறிய பாஸ் கட்சியின் பொதுச்செயலாளர் தக்கியுடின் ஹாசன், “நாங்கள் நாளை திரும்பி வருவோம்” என்று கூறினார்.

அம்னோ தலைவர் அகமட் சாஹிட் ஹமீடி, பாஸ் தலைவர் அப்துல் ஹாடி அவாங் மற்றும் ஜிபிஎஸ் ஒழுகாற்று வாரியத் தலைவர் பாடில்லா யூசோப் ஆகியோரும் வெளியேறினார்கள்.

#TamilSchoolmychoice

ஒரு புதிய அரசாங்கத்தை அமைப்பதற்கு தங்களுக்கு பெரும்பான்மை இருப்பதை அரண்மனைக்கு தெரிவிக்க அக்குழு திட்டமிட்டிருந்தது. ஆனால், இப்போது, மொகிதின் யாசினுக்கு போட்டி கொடுக்கும் வகையில் பெர்சாத்து தலைவர் டாக்டர் மகாதீர் முகமட், தமக்கு பெரும்பான்மை இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

மகாதீருக்கு ஆதரவாக நம்பிக்கைக் கூட்டணி இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.