கோலாலம்பூர்: பிகேஆர் தலைவர் அன்வார் இப்ராகிம் பிரதமருக்கு ஆதரவளித்த போதிலும் இடைக்கால பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட் உருவாக்கக்கூடிய புதிய அரசாங்கத்தில் அன்வார் சேர வாய்ப்பில்லை என்று சுபாங் நாடாளுமன்ற உறுப்பினர் வோங் சென் கூறினார்.
“நம்பிக்கைக் கூட்டணி 2.0- இன் தொடர்ச்சியை உறுதி செய்வதற்காக பிகேஆர் தலைவர் அன்வார் இப்ராகிம் அமைச்சரவையில் இருந்து விலகி மகாதீருக்கு பிரதமராக வழி வகுக்க முன்வந்துள்ளார் என்பதை கட்சி ஒப்புக் கொண்டுள்ளது” என்று அவர் கூறினார்.
நவம்பர் மாதம் நடைபெறும் ஆசிய பசிபிக் பொருளாதார மாநாடு (ஏபெக்) வரை தனது எண்ணத்தை ஒத்திவைக்க அன்வார் ஒப்புக் கொண்டதாக போகஸ் மலேசியா தெரிவித்துள்ளது.