Home One Line P1 “பக்காத்தான் கூட்டணி 114 நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்டிருக்கிறது” – பாஹ்மி பாட்சில் அறிவிப்பு

“பக்காத்தான் கூட்டணி 114 நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்டிருக்கிறது” – பாஹ்மி பாட்சில் அறிவிப்பு

794
0
SHARE
Ad

கோலாலம்பூர் – செலாங்காவ் (சரவாக் நாடாளுமன்ற உறுப்பினர் பாரு பியான் துன் மகாதீரைப் பிரதமராக ஆதரித்து சத்தியப் பிரமாணத்தை வழங்கியிருப்பதால், நம்பிக்கைக் கூட்டணியின் பலம் தற்போது 114 ஆக அதிகரித்திருப்பதாக பிகேஆர் கட்சியின் தொடர்புக் குழு இயக்குநரும் லெம்பா பந்தாய் நாடாளுமன்ற உறுப்பினருமான பாஹ்மி பாட்சில் அறிவித்துள்ளார்.

அஸ்மின் அலியுடன் இணைந்து பிகேஆர் கட்சியில் இருந்து வெளியேறிய பாரு பியான் (படம்) தற்போது மீண்டும் தனது நிலைப்பாட்டை மாற்றி மகாதீருக்கு ஆதரவு வழங்குவதாக அறிவித்திருக்கிறார்.