Home நாடு பிகேஆர் கட்சி மாநிலத் தலைமைத்துவங்களில் மாற்றங்கள்

பிகேஆர் கட்சி மாநிலத் தலைமைத்துவங்களில் மாற்றங்கள்

197
0
SHARE
Ad
பாஹ்மி பாட்சில்

கோலாலம்பூர் : பிகேஆர் கட்சியில் மாநில அளவில் தலைமைத்துவ மாற்றங்கள் ஏற்படுத்தப்பட வேண்டும் என அந்தக் கட்சியின் தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிமுக்கு நெருக்குதல் வழங்கப்பட்டு வந்தன.

இந்நிலையில், மாநில அளவிலான சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக கட்சியின் தகவல் தொடர்புக் குழுத் தலைவர் பாஹ்மி பாட்சில் அறிவித்தார்.

சரவாக் மாநிலத்தின் தலைவராக பாராம் தொகுதியின் ரோலாண்ட் எங்கான் நியமிக்கப்பட்டுள்ளார். துணைத் தலைவராக சந்துபோங் தொகுதியின் அகமட் நசிப் ஜோஹாரி நியமிக்கப்பட்டுள்ளார்.

#TamilSchoolmychoice

சபா மாநிலத்தின் தலைவராக செபாங்கார் நாடாளுமன்ற உறுப்பினர் முஸ்தாபா என்ற முகமட் யூனூஸ் பின் சாக்முட் நியமிக்கப்பட, அவருக்கு துணைத் தலைவராக இனானாம் சட்டமன்ற உறுப்பினர் பெட்டோ காலிம் நியமிக்கப்பட்டார்.

பகாங் மாநிலத்தின் தலைவராக ஃபூசியா சாலே நியமிக்கப்பட்டார். அவர் உள்நாட்டு வாணிப, வாழ்க்கைச் செலவின அமைச்சில் துணையமைச்சராவார். பகாங் துணைத் தலைவராக லிப்பிஸ் தொகுதியைச் சேர்ந்த ரிசால் ஜாமின்.

ஜோகூர் மாநிலத் தலைவராக லெடாங் நாடாளுமன்ற உறுப்பினர் சைட் இப்ராகிம் செட் நோ நியமிக்கப்பட்டார். அம்மாநிலத்தின் துணைத் தலைவராக பாக்ரி தொகுதியின் முகமட் ஷாருடின் குஸ்னி நியமிக்கப்பட்டார்.

கிளந்தான் மாநிலத்தின் தலைவராக தானா மேரா தொகுதியின் முகமட் சுபாராடி முகமட் நூர் நியமிக்கப்பட்டார். அவரின் துணைத் தலைவராக பாசிர் பூத்தே தொகுதியின் ஷாம்சுடின் கானி நியமனம் பெற்றார்.

அன்வாரின் செயலாளரான அஸ்மான் அபிடின் கூட்டரசுப் பிரதேசத்தின் தலைவராகவும் அவருக்குத் துணைத் தலைவராக கெப்போங் தொகுதியின் தலைவர் ஜெயகுமார் முனியாண்டியும் நியமிக்கப்பட்டனர்.