Home நாடு டான்ஸ்ரீ ஜி.ராஜூ மறைவு : “உடன்பிறவா சகோதரனை இழந்தேன்” – டான்ஸ்ரீ குமரன் இரங்கல்

டான்ஸ்ரீ ஜி.ராஜூ மறைவு : “உடன்பிறவா சகோதரனை இழந்தேன்” – டான்ஸ்ரீ குமரன் இரங்கல்

431
0
SHARE
Ad

கோலாலம்பூர் : இன்று காலமான மஇகா பேராக் மாநிலத்தின் முன்னாள் தலைவர் டான்ஸ்ரீ ஜி.ராஜூவின் மறைவால் தான் மிகுந்த வருத்தமடைவதாகவும் “என் உடன்பிறவா சகோதரனை இழந்து வாடுகிறேன்” என்றும் டான்ஸ்ரீ க.குமரன் தனது இரங்கல் செய்தியில் தெரிவித்தார்.

அறுபத்தைந்து ஆண்டுகளாக உடன் பிறவா சகோதரனாக பழகிய நண்பனை இழந்த துன்பத்தில் ஆழ்ந்திருப்பதாக, டான்ஸ்ரீ கோ.இராஜுவின் மறைவு குறித்து தான்ஸ்ரீ குமரன் குறிப்பிட்டார்.

1960-ஆம் ஆண்டில் தமிழாசிரியர் போதனாமுறை பயிற்சி வகுப்பில் தொடங்கிய அறிமுகம், தமிழாசிரியர் தேசிய சங்கம், பேரா மாநில தமிழாசிரியர் கூட்டுறவு கழகம் இவற்றில் தொடர்ந்ததை நினைவு கூர்ந்த டான்ஸ்ரீ குமரன், தாம் பேராக் ம.இ.கா.வின் செயலாளராகவும், தலைவராகவும் இருபத்து ஏழு ஆண்டுகள் சேவையாற்றிய காலத்தில் தம்மோடு இணைந்து, பொருளாளராக, செயலாளராக, துணைத்தலைவராக அவர் பணியாற்றிய அந்த பசுமையான நாட்களை மறக்கவியலாது என்று குறிப்பிட்டார்.

டான்ஸ்ரீ க.குமரன்
#TamilSchoolmychoice

நூற்றிரண்டு கிளைகளைக் கொண்டு இயங்கிய பேராக் ம.இ.காவில் எண்ணூற்றுக்கும் அதிகமான கிளைகளை உருவாக்க ராஜூ தம்முடன் இணைந்து பாடாற்றியதை நன்றியுடன் நினைவுகூர்ந்த டான்ஸ்ரீ குமரன், ம.இ.கா.வின் அனைத்துத் திட்டங்களின் வெற்றிக்கு மட்டுமல்லாது, செனட்டராக,பேரா மாநில சட்டப் பேரவை, ஊத்தான் மெலிந்தாங் சட்டமன்றத் தொகுதி உறுப்பினராக, மாநில ஆட்சிக்குழு உறுப்பினராக அவர் நாட்டிற்கும் சமுதாயத்திற்கும் ஆற்றிய பணிகள் வரலாற்றுப் பதிவுகளாகும். தான்ஸ்ரீ இராஜுவுடன், பழகிய, பணியாற்றிய அந்த இனிய நாட்களை தமது நெஞ்சிருக்கும்வரை சுமந்துகொண்டிருப்பேன் என்று கூறிய டான்ஸ்ரீ குமரன், நண்பரின் ஆதன் அமைதியடைய இறையருளைப் போற்றுவதாகக் குறிப்பிட்டார்.