கோலாலம்பூர்: புதிய அமைச்சரவை அமைக்கும் விவகாரம் தொடர்பாக பிரதமர் மொகிதின் யாசினுடன் பேசுவதற்கான வாய்ப்பை வழங்குவதற்காக, அகமட் சாஹிட் ஹமீடி சம்பந்தப்பட்ட நீதிமன்ற விசாரணை இன்று திங்கட்கிழமை ஒத்திவைக்கப்பட்டது.
கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் அகமட் சாஹிட் சம்பந்தப்பட்ட அகால்புடி அறக்கட்டளை ஊழல், பண மோசடி மற்றும் நம்பிக்கை மோசடி வழக்கு விசாரணைத் தொடர்பாக இந்த இந்த விண்ணப்பம் செய்யப்பட்டது.
அவரது வழக்கறிஞர் ஹிஸ்யம் தெஹ் போ திக்கின் கூற்றுப்படி, சாஹிட் ஹமீடி பிரதமரை சந்திக்க இந்த விண்ணப்பம் வைக்கப்படுகிறது என்று தெரிவித்தார்.
“குற்றம் சாட்டப்பட்டவர் இன்று அமைச்சரவை உருவாக்கம் தொடர்பாக பிரதமருடன் கலந்துரையாடுவார். எனவே, இன்றைய நடவடிக்கைகளுக்கு தடை விதிக்க நீதிமன்றத்தை நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்.”
“அவரது இருப்பு தேவையானது” என்று அவர் கூறினார்.
நீதிபதி கொலின் லாரன்ஸ் செக்குவெரா அனுமதி வழங்கி, வழக்கு நாளை மீண்டும் தொடங்கும் என்று உத்தரவிட்டார்.
47 குற்றச்சாட்டுகளை அகமட் சாஹிட் ஹமீடி எதிர்கொள்கிறார்.