Home One Line P1 “மலேசியாவைக் காப்பாற்றுவோம்” – ஆர்ப்பாட்டங்கள் தொடரும்

“மலேசியாவைக் காப்பாற்றுவோம்” – ஆர்ப்பாட்டங்கள் தொடரும்

646
0
SHARE
Ad

கோலாலம்பூர் – நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலையில் டத்தாரான் மெர்டேக்கா மைதானத்தில் புதிய அரசாங்கத்திற்கு எதிராகத் திரண்ட ஆர்ப்பாட்டக்காரர்கள் அமைதியான முறையில் தங்களின் போராட்டத்தை நடத்தி முடித்து விட்டு கலைந்து சென்றனர்.

மாலை 6.00 மணியளவில், காவல் துறையினரின் எச்சரிக்கையையும் மீறி தலைநகர் சோகோ பேரங்காடி முன் திரண்ட ஆர்ப்பாட்டக்காரர்கள்

“மலேசியாவைக் காப்பாற்றுவோம்” என்ற தலைப்பில் நடைபெற்ற போராட்டத்தில் அம்பிகா சீனிவாசனும் கலந்து கொண்டு உரையாற்றினார்.

#TamilSchoolmychoice

பின்கதவு அரசாங்கம் அமைக்கப்பட்டதற்கு எதிராக எழுந்துள்ள மக்களின் அதிருப்தியையும், வெறுப்பையும் வெளிக்காட்டும் விதமாக தொடர்ந்து இதுபோன்ற ஆர்ப்பார்ட்டங்கள் ஏற்பாடு செய்யப்படும் என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்திருக்கின்றனர்.

தங்களின் ஆர்ப்பாட்டத்திற்கு இடையூறு செய்யாமல் உதவி செய்த காவல் துறையினருக்கும் ஏற்பாட்டாளர்கள் நன்றி தெரிவித்தனர்.

முன்னதாக ஆர்ப்பாட்டக்காரர்கள் அமைதியான முறையில் டத்தாரான் மெர்டேக்கா மைதானத்திற்கு அணிவகுத்துச் செல்ல அனுமதி அளித்த காவல் துறையினர் எனினும் அவர்கள் பதாகைகளை ஏந்திச் செல்லக் கூடாது என்றும் தார் சாலையில் நடந்து செல்லக் கூடாது என்றும் கேட்டுக் கொண்டனர்.