Home One Line P1 மொகிதின் அரசியல் தலைவர்களை இன்று சந்திக்கவில்லை- நீதிமன்றத்தில் சாஹிட்டின் விண்ணப்பம் பொய்யா?

மொகிதின் அரசியல் தலைவர்களை இன்று சந்திக்கவில்லை- நீதிமன்றத்தில் சாஹிட்டின் விண்ணப்பம் பொய்யா?

624
0
SHARE
Ad

கோலாலம்பூர்: இன்று திங்கட்கிழமை வழக்கு விசாரணையில் ஈடுபட இருந்த அம்னோ தலைவர் டாக்டர் அகமட் சாஹிட் ஹமீடி அமைச்சரவை குறித்து விவாதிக்க வேண்டியிருந்ததால், விசாரணை ஒத்திவைக்கப்பட வேண்டும் என்று விண்ணப்பித்ததற்கு நீதிமன்றம் அனுமதி அளித்தது. ஆயினும், சில மணிநேரங்களுக்குப் பிறகு, பிரதமர் துறை அதிர்ச்சியூட்டும் அறிக்கையை வெளியிட்டது.

முன்னதாக இன்று வெளியிட்ட அறிக்கையில், மொகிதின் யாசின் எந்த அரசியல் தலைவர்களையும் சந்திக்க திட்டமிடப்படவில்லை என்று பிரதமர் அலுவலகம் தெரிவித்திருந்தது.

“இன்று பிரதமர், தேசிய பொதுச் செயலாளர் மற்றும் அரசாங்கத் துறைகள் தலைவர்களை சந்தித்து அரசாங்கத்தின் நிர்வாகத்தை ஒருங்கிணைக்க திட்டமிடப்பட்டுள்ளது.”

#TamilSchoolmychoice

“அரசியல் தலைவர்களுடனான சந்திப்புகள் அல்லது கூட்டங்கள் இன்று திட்டமிடப்படவில்லை என்பதை பிரதமர் அலுவலகம் தெளிவுபடுத்த விரும்புகிறது” என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இது மொகிதினின் முகநூலிலும் பகிரப்பட்டுள்ளது.