Home One Line P1 கொவிட்-19: காசானா அதிகாரியின் தொடர்பில் இருந்த அமைச்சர், துணை அமைச்சர் சோதிக்கப்பட்டு வருகின்றனர்!

கொவிட்-19: காசானா அதிகாரியின் தொடர்பில் இருந்த அமைச்சர், துணை அமைச்சர் சோதிக்கப்பட்டு வருகின்றனர்!

500
0
SHARE
Ad

கோலாலம்பூர்: காசானா நேஷனல் அதிகாரியுடன் நெருங்கிய தொடர்பில் உள்ளவர்கள் எவரும் கொவிட்-19 பாதிப்புக்கும் ஆளாகவில்லை என்று சுகாதார இயக்குனர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா உறுதிப்படுத்தினார்.

“நெருங்கிய தொடர்பை நாங்கள் தொடர்ந்து கண்டுபிடிப்போம்” என்று டாக்டர் ஹிஷாம் மலேசியாகினியிடம் கூறினார்.

“இதுவரை அந்நோயாளியுடன் நெருங்கிய தொடர்பில் உள்ளவர்கள் யாரும் பாதிக்கப்படவில்லை,” என்று அவர் கூறினார்.

#TamilSchoolmychoice

சம்பந்தப்பட்ட அந்நோயாளி முன்னாள் அமைச்சர் மற்றும் முன்னாள் துணை அமைச்சருடன் நெருங்கிய தொடர்பில் இருந்ததாக நம்பப்படுகிறது.

காசானா நிர்வாகத்தின் மூத்த அதிகாரியும், அரசாங்கத்துடன் இணைக்கப்பட்ட நிறுவனத்தின் தலைவருமான அந்நோயாளி, முன்னாள் அமைச்சர்கள் மற்றும் பிரதிநிதிகள் கலந்து கொண்ட அமைச்சக நிகழ்ச்சியில் கலந்து கொண்டார் என்பது தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்ச்சி பிப்ரவரி 27-ஆம் தேதியன்று கோலாலம்பூரில் உள்ள ஒரு தங்கும்விடுதியில் நடைபெற்றது.