Home One Line P2 மூக்குத்தி அம்மன்: யோகி பாபுவுக்கு அடுத்து நயந்தாராவை வறுத்தெடுக்கும் இரசிகர்கள்!

மூக்குத்தி அம்மன்: யோகி பாபுவுக்கு அடுத்து நயந்தாராவை வறுத்தெடுக்கும் இரசிகர்கள்!

1284
0
SHARE
Ad

சென்னை: அண்மையில் நகைச்சுவை நடிகர் யோகி பாபு கடவுள் முருகன் வேடத்தில் இருந்த ‘காக்டைல்’ திரைப்படத்தின் முதல் தோற்றத்தை கடுமையாக விமர்சித்தது குறிப்பிடத்தக்கது.

நேற்று ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட்ட மூக்குத்தி அம்மன் படத்தின் முதல் தோற்றத்தில் நடிகை நயன்தாரா அம்மன் வேடத்தில் இருக்கும் முதல் தோற்றம் வெளியிடப்பட்டதை அடுத்து அதே பாணியிலான விமர்சனங்கள் எழுந்துள்ளன.

முதல் முறையாக நடிகர் ஆர்.ஜே. பாலாஜி இப்படத்தின் மூலமாக இயக்குனராக உருவெடுத்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பை 50 நாட்களிலேயே பாலாஜி முடித்துவிட்டார்.

#TamilSchoolmychoice

நடிகை நயன்தாரா அம்மன் வேடமிட்டிருப்பது இரசிகர்களின் எதிர்ப்புக்கு ஆளானது. ஒரு சிலர் வேண்டுமனே குறை கூறுவதற்காக எதையாவது சொல்ல வேண்டாம் என்றும் தெரிவித்துள்ளனர். இத்திரைப்படம் வருகிற மே மாதம் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.