கோலாலம்பூர்: 2.6 பில்லியன் ரிங்கிட் நன்கொடை வழக்கில் முன்னாள் எம்ஏசிசி விசாரணை அதிகாரி, முகமட் நஷாருடின் அமீர், 2010-ஆம் ஆண்டு ஜனவரி 11-ஆம் தேதியன்று நஜிப் ரசாக் எங்கிருந்தார் என்ற எந்த ஆவணமும் இன்னும் பெறவில்லை என்று தெரிவித்தார்.
கடந்த வாரம், இந்த விவகாரம் தொடர்பான ஆவணங்களை இன்று திங்கட்கிழமை சமர்ப்பிக்குமாறு நஷாருடினிடம் அரசு தரப்பு வழக்கறிஞர் சிதம்பரம் கேட்டுக் கொண்டார்.
அந்த நாளில் நஜிப் சவுதி அரேபியாவிற்கு அதிகாரப்பூர்வமற்ற பயணத்தை மேற்கொண்டாரா அல்லது கோலாலம்பூரில் உள்ள 1எம்டிபி நிறுவன தலைமையகத்தில் இருந்தாரா என்பதை சீதம்பரம் அறிய விரும்புகிறார்.
முன்னதாக, சில சாட்சிகள் நஜிப் 2010-ஆம் ஆண்டு ஜனவரி 11 முதல் 16 வரை சவுடி அரேபியாவுக்கு பயணம் மேற்கொண்டிருந்ததாகக் கூறினர்.
ஜனவரி 11-ஆம் தேதி அதிகாரப்பூர்வமற்ற பயணம் என்றும் , உத்தியோகபூர்வ பயணம் ஜனவரி 13 முதல் 16 வரை என்றும் குறிப்பிட்டிருந்தனர்.
இந்த பயணத்தின் போது, சவுதி அரசாங்கம், அதாவது மன்னர் அப்துல்லா மூலம் நஜிப்புக்கு நிதி உதவி வழங்குவதாக உறுதியளித்திருந்ததாகக் கூறியதாக அவர்கள் கூறினர்.