ரியோ டி ஜெனிரோ: நேற்று செவ்வாயன்று பிரேசில் கடற்கரையில் ஏற்பட்ட புயல் காரணமாக நிலச்சரிவு ஏற்பட்டதில் குறைந்தது 16 பேர் கொல்லப்பட்டனர்.
மேலும் 40-க்கும் மேற்பட்டோரைக் காணவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பலியானோரின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என்று கூறப்படுகிறது.
குவாருஜா, சாண்டோஸ் மற்றும் சாவோ விசென்டே ஆகிய இடங்களில் மரணங்கள் பதிவாகியுள்ளதாக சாவ் பாலோ சிவில் பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதற்கிடையில், பாதிக்கப்பட்ட 5,000- க்கும் மேற்பட்டோர் தங்கள் வீடுகளில் இருந்து வெளியேற்றப்பட வேண்டும் என்று மாநில அதிகாரிகள் ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.
சாவோ பாலோ கடற்கரையில் செவ்வாய்க்கிழமை வரை மழை தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னதாக, ஞாயிற்றுக்கிழமை மற்றும் திங்கட்கிழமைகளில் ரியோ டி ஜெனிரோவின் சில பகுதிகளில் வெள்ளம் ஏற்பட்டது, இதனால் பலர் உயிரிழந்தனர்.