Home One Line P1 கொவிட்-19: இத்தாலி, ஜப்பான், ஈரானின் 7 நகரங்களிலிருந்து வருபவர்களுக்கு நாட்டில் நுழையத் தடை!

கொவிட்-19: இத்தாலி, ஜப்பான், ஈரானின் 7 நகரங்களிலிருந்து வருபவர்களுக்கு நாட்டில் நுழையத் தடை!

692
0
SHARE
Ad

கோலாலம்பூர்: 14 நாட்களுக்குள் இத்தாலி, ஜப்பான் மற்றும் ஈரானில் உள்ள நகரங்களுக்கு சென்று வந்த அனைத்து மலேசியர்கள், சுற்றுலாப் பயணிகள் மலேசியாவிற்குள் நுழையத் தற்காலிகமாகக் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது என்று சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

செய்தியாளர்களிடம் பேசிய சுகாதார அமைச்சின் இயக்குனர் டாக்டர் நூர் ஹிஷாம், மலேசியாவிற்கு வருவதற்கு 14 நாட்களுக்குள் குறிப்பிடப்பட்ட ஒரு சில நகரத்திற்கு சென்று வந்த மலேசியர்கள் உட்பட அனைத்து வருகையாளர்களையும் இந்தத் தடை உள்ளடக்கும் என்று கூறினார்.

இத்தாலியின் லோம்பார்டி, வெனெட்டோ மற்றும் எமிலியா-ரோமக்னா; ஜப்பானில் ஹொக்கைடோ மற்றும் ஈரானில் தெஹ்ரான், கோம் மற்றும் கிலான் ஆகிய நகரங்களிலிருந்து வருவோருக்கு இந்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

#TamilSchoolmychoice

“நாட்டில் கொவிட்-19 பாதிப்பின் தற்போதைய நிலையின் அடிப்படையில், வெளிநாடுகளில், குறிப்பாக குறிப்பிடப்பட்ட நகரம் அல்லது பிராந்தியத்தில் வாழும் மலேசியர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். அவர்களின் தனிப்பட்ட சுகாதாரத் தூய்மையை மேம்படுத்த வேண்டும் மற்றும் உள்ளூர் அதிகாரிகள் வழங்கும் அறிவுறுத்தல்களுக்கு எப்போதும் கீழ்ப்படிய வேண்டும்.”

“கூடுதலாக, வெளிநாடுகளில் உள்ள மலேசியர்களும் அருகிலுள்ள மலேசிய தூதரகத்தில் பதிவு செய்ய ஊக்குவிக்கப்படுகிறார்கள்,” என்று அவர் கூறினார்.

முன்னதாக, மலேசியா, தென் கொரியா மற்றும் சீனாவின் சில பகுதிகளிலிருந்து வருபவர்களை தற்காலிகமாக நாட்டினுள் நுழைவதற்குத் தடைவிதித்துள்ளது.