Home One Line P2 கொவிட்-19: “இது ஒத்திகைக்கான நேரம் அல்ல, தீவிரமாக செயல்பட வேண்டும்”- உலக சுகாதார நிறுவனம்...

கொவிட்-19: “இது ஒத்திகைக்கான நேரம் அல்ல, தீவிரமாக செயல்பட வேண்டும்”- உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை

666
0
SHARE
Ad

osஜெனீவா: கொவிட்-19 பாதிப்பைத் தடுக்கும் முயற்சியில் அனைத்து நாடுகளும் மிகவும் தீவிரமாக செயல்பட வேண்டும் என்று உலக சுகாதார அமைப்பு நிறுவனம் கேட்டுக்கொண்டுள்ளது.

இதுவரை சீனாவுக்கு வெளியே கொரொனாவைரஸால் ஏற்பட்ட தொற்றுநோய்கள் மற்றும் இறப்புகளின் எண்ணிக்கை 17 மடங்கு அதிகரித்ததைத் தொடர்ந்து இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

“இது பயிற்சி அல்ல! இது சாக்குக்கான நேரம் அல்ல. இப்போது மிகவும் தீவிரமாக செயல்பட வேண்டிய நேரம்.”

#TamilSchoolmychoice

“உலகெங்கிலும் உள்ள நாடுகள் நீண்ட காலமாக இத்தகைய சூழ்நிலைகளைத் திட்டமிட்டு வருகின்றன. அவற்றை நடைமுறைப்படுத்த வேண்டிய நேரம் இது” என்று ஜெனீவாவில் தினசரி மாநாட்டில் இயக்குநர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் கூறினார்.

நேற்று வியாழக்கிழமை, இந்த வைரஸ் 97,000- க்கும் அதிகமானவர்களை பாதித்துள்ள நிலையில், 3,300- க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர்.