ஜெட்டா: சவுதி அரச குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு மூத்த உறுப்பினர்களை சவுதி அரேபியா அமலாக்கப் பிரிவு தடுத்து வைத்துள்ளது.
சல்மான் மன்னரின் இளைய சகோதரரான இளவரசர் அகமட் பின் அப்துலாஸீஸ் மற்றும் மன்னரின் அண்ணன் மகன் முகமட் பின் நாயீப் ஆகியோர் கைது செய்யப்பட்டதாக இரு வட்டாரங்கள் தெரிவித்தன.
தடுப்புக்காவல்கள் வெள்ளிக்கிழமை நடந்ததாக ஒரு வட்டாரம் தெரிவித்தது. தடுப்புக்காவல்களுக்குப் பின்னால் உள்ள காரணங்களை ராய்ட்டர்ஸால் உடனடியாக தீர்மானிக்க முடியவில்லை என்று குறிப்பிட்டுள்ளது.
இளவரசர் முகமட் பின் சல்மான், மன்னர் சல்மானின் மகனாவார். இவர் உலகின் தலைசிறந்த எண்ணெய் ஏற்றுமதியாளரும், அமெரிக்காவின் முக்கிய கூட்டாளியுமானவர்.
சனிக்கிழமை அதிகாலை கருத்து தெரிவிக்க சவுதி அதிகாரிகளை உடனடியாக அணுக முடியவில்லை என்று ராய்ட்டர்ஸ் தெரிவித்துள்ளது.