Home One Line P1 வீடற்றவர்களுக்காக தற்காலிக தங்குமிடத்தை பினாங்கு மாநிலம் ஏற்படுத்தியுள்ளது!

வீடற்றவர்களுக்காக தற்காலிக தங்குமிடத்தை பினாங்கு மாநிலம் ஏற்படுத்தியுள்ளது!

622
0
SHARE
Ad

ஜோர்ஜ் டவுன்: வீடற்றவர்களுக்கு தங்குமிடம் வழங்குவதற்காக தற்காலிக மாற்று இடத்தை பினாங்கு மாநிலம் அமைக்கவுள்ளது.

டிரிபிள் நெட் ஜீரோ (Triple Net Zero) திட்டமானது, பினாங்கின் நகராண்மைக் கழகத்திற்குச் சொந்தமான 1,370 சதுர மீட்டர் நிலத்தில் கட்டப்படும் முதல் தங்குமிடமாக இருக்கும் என்று முதல்வர் சோவ் கோன் யோவ் கூறினார்.

“இந்த ஆண்டு வீடற்றோர் பிரச்சனை அதிகரித்து வருவதால், எம்பிபிபி உடன் இணைந்து மாநில அரசு, பினாங்கு மக்கள் நலன், கவனிப்பு சங்கம் மற்றும் சுற்றுச்சூழல் குழுத் தலைவர் பீ பூன் போ ஆகியோரால் முன்வைக்கப்பட்ட திட்டத்தை செயல்படுத்த ஒப்புக் கொண்டுள்ளது,” என்று அவர் கூறினார்.

#TamilSchoolmychoice

பினாங்கு சமூக நலத்துறையின் பதிவுகள் மற்றும் புள்ளிவிவரங்களின் அடிப்படையில், 2019 ஜனவரி முதல் டிசம்பர் வரை, பிச்சைக்காரர்களையும், அலைந்து திரிபவர்களையும் மீட்பதற்கான மொத்தம் 458 நடவடிக்கைகள் பினாங்கு மாவட்டங்கள் அனைத்திலும் நடத்தப்பட்டன, அதாவது வடகிழக்கு 152 நடவடிக்கைகள், தென்மேற்கு (103), செபெராங் பெராய் உதாரா (89), செபெராங் பெராய் தெங்கா (47), செபெராங் பெராய் செலாத்தான் 67 செயல்பாடுகள் நடத்தப்பட்டன.