Home One Line P2 யெஸ் வங்கி நிறுவனர் ராணா கபூரின் இல்லத்தில் அமலாக்கத் துறை சோதனை!

யெஸ் வங்கி நிறுவனர் ராணா கபூரின் இல்லத்தில் அமலாக்கத் துறை சோதனை!

772
0
SHARE
Ad

புது டில்லி: அமலாக்கத்துறை யெஸ் வங்கி (Yes Bank) நிறுவனர் ராணா கபூரின் இல்லத்தில் சோதனை நடத்தி வருகிறது. அப் பவர் கார்ப்பரேஷனின் (Up Power Corporation) வருங்கால வைப்பு நிதியின் முதலீட்டிற்காக டிஎச்எப்எல் (DHFL)மீது பதிவு செய்யப்பட்ட பிஎம்எல்ஏ (PMLA) வழக்கு தொடர்பாக இந்த பரிசோதனை மேற்கொள்ளப்படுகின்றன.

டிஎச்எப்எல் நிறுவனத்திற்கு யெஸ் வங்கி நூற்றுக்கணக்கான கோடி மதிப்புள்ள கடன்களை வழங்கியதாக அமலாக்கத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன. பின்னர் அவை செயல்படாத சொத்துகளாக மாறி, இறுதியில் வங்கிக்கு இழப்பு ஏற்பட வழிவகுத்தது.

ரிசர்வ் வங்கி (RBI)வியாழக்கிழமை வங்கியை தற்காலிகமாக நிறுத்தி ஒரு நிர்வாகியை நியமித்தது. அதே நேரத்தில் வங்கியில் கணக்கு வைத்திருப்பவர்கள் பணத்தை திரும்ப எடுக்கும் வரம்பு ஒரு மாத காலத்திற்கு 50,000 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டது.

#TamilSchoolmychoice

கடன்கள் தொடர்பான ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டு வருவதாகவும், டிஎச்எப்எல் கடன்கள் வழங்கும் போது ஏதேனும் முறைகேடுகள் நடந்ததா என்று சோதனை நடத்தப்படுவதாகவும் வட்டாரம் தெரிவித்துள்ளது.

ராணா கபூர் கணக்குகளிலும் அவரது குடும்ப உறுப்பினர்களிடமும் சட்டவிரோதமாக நிதி திருப்பிவிடப்படுவதையும் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை செய்கின்றனர்.

இதற்கிடையில், ராணா கபூர் நாட்டை விட்டு வெளியேறுவதைத் தடுக்க கவன ஈர்ப்பு சுற்றறிக்கையை அமலாக்கத் துறை அனுப்பியுள்ளது.