Home One Line P2 யெஸ் வங்கியின் ராணா கபூர் கைது – மார்ச் 11 வரை தடுப்புக் காவல்

யெஸ் வங்கியின் ராணா கபூர் கைது – மார்ச் 11 வரை தடுப்புக் காவல்

845
0
SHARE
Ad

மும்பை – இந்தியாவில் நிதி நெருக்கடிக்கு உள்ளாகியிருக்கும் யெஸ் வங்கியின் தோற்றுநர் ராணா கபூரை கடந்த இரண்டு நாட்களாக அவரது இல்லத்தில் அதிரடி சோதனை நடத்தி விசாரித்து வந்த அமுலாக்கத் துறை இன்று ஞாயிற்றுக்கிழமை காலை அவரைக் கைது செய்துள்ளது.

அதைத் தொடர்ந்து மும்பை நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்ட அவருக்கு எதிர்வரும் மார்ச் 11 வரை தடுப்புக் காவல் வழங்கப்பட்டுள்ளது.

பணப்பரிமாற்ற மோசடி, அதிக அளவில் சிலருக்குக் கடன்வசதிகள் வழங்கியது போன்ற காரணங்களுக்காக அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

#TamilSchoolmychoice

யெஸ் வங்கியிலிருந்து அதிக பட்சம் 50 ஆயிரம் ரூபாய் மட்டுமே வாடிக்கையாளர்கள் எடுக்க முடியும் என்றும் இந்த நடைமுறை ஏப்ரல் 3-ஆம் தேதி வரை நீடிக்கும் என்றும் அந்த வங்கியின் நிர்வாகம் அறிவித்திருக்கிறது.

நேற்று சனிக்கிழமை (மார்ச் 7) மும்பை அமுலாக்கத்துறைக்கு விசாரணைக்காக ராணா கபூர் அழைத்துச் செல்லப்பட்ட அதே வேளையில் அவரது இல்லத்தில் அதிரடி சோதனைகள் நடத்திய அமுலாக்கத்துறை அவர் மீது கள்ளப் பணப் பரிமாற்றத் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கையும் பதிவு செய்ததது.

இனி யெஸ் வங்கி வாடிக்கையாளர்கள் யெஸ் வங்கி தானியங்கி இயந்திரங்களில் இருந்து பணத்தை எடுக்க முடியும் என்ற அறிவிக்கையும் அந்த வங்கியின் நிர்வாகம் நேற்று சனிக்கிழமை இரவு அறிவித்தது.

இதற்கிடையில் ராணா கபூரின் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புடைய சொந்த சொத்துகள் குறித்த விசாரணைகளும் தொடங்கப்பட்டுள்ளன. இவற்றில் பெரும்பான்மையான சொத்துகள் இந்தியாவில் இருப்பதாகவும் மேலும் பல சொத்துகள் வெளிநாடுகளில் இருப்பதாகவும் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.