Home One Line P2 தமது இசை இராஜாங்கத்தில் மலேசிய இரசிகர்களை பரவசமூட்ட வருகிறார் இளையராஜா!

தமது இசை இராஜாங்கத்தில் மலேசிய இரசிகர்களை பரவசமூட்ட வருகிறார் இளையராஜா!

973
0
SHARE
Ad

கோலாலம்பூர் – இந்திய இசை உலகின் பிதாமகன், வரலாறு போற்றும் கலைஞன் இசைஞானி மேஸ்ட்ரோ இளையராஜா தமது இசை இராஜாங்கத்தில் இரசிகர்களை பரவசமூட்ட மீண்டும் மலேசியா வருகிறார். தரமான இசை நிகழ்ச்சிகளின் வாயிலாக தனி முத்திரை பதித்து வரும் மோஜோ நிறுவனத்தின் ஏற்பாட்டில் ‘மேஸ்ட்ரோ இளையராஜா: லைப் இன் கோலாலம்பூர்’ இசை நிகழ்ச்சி எதிர்வரும் 14 மார்ச் 2020, சனிக்கிழமை தலைநகர் மிட்டேக் (MITEC) உள்ளரங்கில் மிகவும் பிரம்மாண்டமாக நடைப்பெறவுள்ளது.

இசை உலகில் தனது திரை இசைப் பாடல்களின் மூலம் ஒவ்வொரு இல்லத்திலும், இதயத்திலும் இடம்பிடித்த உலகின் தலை சிறந்த இசை அமைப்பாளர்களில் ஒருவரான இளையராஜா இதுவரை 1000 படங்களுக்கு மேலாக இந்தியாவின் பல்வேறு மொழிகளில் பின்னணி இசையமைத்தும், 5000-த்திற்கும் மேற்பட்ட பாடல்களுக்கு மெட்டமைத்தும் தனது குரலால் நூற்றுக்கணக்கான பாடல்களைப் பாடியும் இரசிகர்களை இசையால் தன் வசப்படுத்தியவர். சிம்பொனி, சிம்பொனியில் திருவாசகம் என தனது எல்லைகளை விரிவுபடுத்தி இசை உலகத்தின் கவனத்தை ஈர்த்தவர்.

வாழும் சகாப்தமான இளையராஜாவின் இசையில் உருவான பாடல்கள் கடந்த தலைமுறையினர், தற்போதைய தலைமுறையினர் மட்டுமில்லாமல் எதிர்கால தலைமுறையினரும் கேட்டு மகிழும் வகையில் சாகா வரம் பெற்றுள்ளன. தனது இசையின் மூலம் இந்தியா மட்டுமில்லாமல் உலகமெங்கும் கோடிக்கணக்கான இரசிகர்களை கட்டிப்போட்டு அவர்களின் அன்புக்கு பாத்திரமாக உள்ளார்.

#TamilSchoolmychoice

இந்த இசை நிகழ்ச்சியில் திரை உலகின் முன்னணி பாடகர்களான எஸ்.பி.பாலசுப்ரமணியம், மனோ, ஹரிச்சரண், ஸ்வேதா மேனன், உஷா உதுப், மது பாலகிருஷ்ணன் என மேலும் பல கலைஞர்களும் இளையராஜாவின் இசைக்கு மெருகேற்றி இரசிகர்களை இசை மழையில் திளைக்க வைக்கவுள்ளனர்.

குறிப்பாக பாடும் நிலா எஸ்.பி.பாலசுப்ரமணியம் இளையராஜாவோடு நம் நாட்டு மேடையில் நீண்ட கால இடைவெளிக்குப் பின்னர் முதன் முறையாக ஒன்றிணையவுள்ளது இரசிகர்களுக்கு மறக்க இயலா அனுபவத்தை வழங்கும் என்பது திண்ணம்.

மலேசிய இரசிகர்களின் அபரிதமான ஆதரவுடன் நிகழ்ச்சிக்கான நுழைவுச் சீட்டுகள் மிகவும் பரபரப்பான விற்பனையில் உள்ளதாக மோஜோ நிறுவனத்தினர் குறிப்பிட்டனர். இரசிகர்கள் நுழைவுச் சீட்டுகளை AirAsiaRedtix.com/maestro இணையத்தளத்தில் பெற்றுக்கொள்ளலாம்.

ஊடகத் தகவல்களுக்கு ஜீனி அவர்களுடன் +017-6571527 தொலைபேசி வாயிலாக அல்லது zeenee@mojoprojects.asia மின்னஞ்சல் வாயிலாக தொடர்பு கொள்ளவும்.